Monday, November 30, 2009

ஜனாதிபதி தேர்தலில் 5 வேட்பாளர்கள்.

எதிர்வரும் ஜனவரி மாதம் 26ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 5 வேட்பாளர்கள் களமிறங்கவுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவும், புதிய இடதுசாரி முன்னணி சார்பாக விக்ரமபாகு கருணாரத்னவும், சோசலிச சமசமாஜ கட்சி சார்பாக விஜே டயஸ், பிக்குகள் முன்னணி சார்பாக தேரர் பத்தரமுல்ல சீலாரத்ன வும் போட்டியிடவுள்ளதாக தெரியவருகின்றது.

அதே நேரம் தமிழ் மக்கள் சார்பாக தமிழ் வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு பல தரப்பினரும் முனைந்து வருவதுடன் இவ்விடயம் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ரெலோ அமைச்பைச் சேர்ந்த சிறிகாந்தா தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக உள்ளுர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment