அமெரிக்காவில் 4 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை .
அமெரிக்காவின் தெற்கு சியேட்டல் பகுதியில் உள்ள டோகாமாவில் விமான படை தளம் உள்ளது. இங்கு பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் கிரிக் ரிச்சர்ட்ஸ், லினா கிரிஸ் வேர்ல்ட், ரொனால்ட், மார்க் ரெனிஜர் ஆகிய 4 பேரும் தங்கள் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அருகில் உள்ள 'காபி ஷாப்' பில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் இந்த 4 போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 பேரும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நேற்றுக்காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க பொலிஸார் 37 வயதுடைய Maurice Clemmons, என்பவரை தேடுகின்றனர். இவர் தொடர்பாக தகவல்களை வழங்குவோருக்கு 10000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பல குற்றங்களை புரிந்துள்ள குற்றவாளியெனவும் கடந்த வாரம் 150000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப்பிணையில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட அவர் இச்செயலில் ஈடுபட்டள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை , சிறுமி ஒருத்தியை கற்பழித்தமை போன்ற குற்றங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.
அதே நேரம் கொல்லப்பட்ட நால்வரும் தமது கடமையை ஆரம்பிப்புதற்கு முன்னர் சிற்றுண்டிசாலையில் இருந்து, தங்கள் லப்டொப்களில் அலுவலக வேலைகளை தயார் படுத்தி கொண்டிருந்துள்ளனர். இருவர் இருக்கையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாமவர் எழுந்து நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், நான்காமவர் கொலைகாரனுடன் சண்டையிட்டு தோல்வியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.
அத்துடன் கொலைகாரன் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எவராவது வைத்தியசாலைகளுக்கு வந்தால் தெரியப்படுத்துமாறும் அறிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment