Tuesday, November 10, 2009

சவுதியில் கைவிடப்பட்ட 260 இலங்கையர்களை அழைத்துவர தூதரகம் ஏற்பாடு.

சவுதி அரேபியாவின் தலைநகர் ஜித்தாவில் கைவிடப்பட்ட நிலையில் நிர்கதியானவர்களான 3000 தொழிலாளர்கள் அங்குள்ள ஷறாபியா எனப்படும் பாரிய பாலம் ஒன்றின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் காணப்படும் 260 இலங்கையர்களை நாட்டுக்கு திருப்பி அழைந்துவர சவுதியில் உள்ள இலங்கைத் தூதரகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தூதரக அதிகாரி பெரேரா தெரிவித்துள்ளார்.

260 பேருக்குமான விமானச் சீட்டுக்கள் தூதரகம் வழங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நிர்கதியாக்கப்பட்டுள்ளவர்கள் தாங்கள் அனைவரும் வீட்டுப் பணிப்பெண்களாகவும், சிலர் தொழிற்சாலை வேலையாட்களாகவும் தொழில் புரிந்து வந்ததாகவும், பல்வேறுபட்ட துன்புறுத்தல்கள் காரணமாக தாம் தமது தொழிலை தூக்கி எறிந்து விட்டு தெருவுக்கு வர நிர்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவித்ததுடன், தமக்கான கொடுப்பனவுகள் கூட மாதக்கணக்கில் வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com