Friday, November 27, 2009

எம்ஐ 24 ரக ஹெலிகொப்டர் ஒன்று வீழ்ந்து நொருங்கியுள்ளது. (2ம் இணைப்பு)

இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான எம்ஐ 24 ரக விமானம் ஒன்று புத்தள விற்கு கிழக்கே 5 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள வீரவில பிரதேசத்தில் வீழ்ந்து நொருங்கியுள்ளது. விமானப்படையின் 9ம் படையணியைச் சேர்ந்தோர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட இயந்திரக் கோளாறுகாரணமாக குறிப்பிட்ட விமானம் வீழ்ந்து நொறுங்கியுள்ளதாகவும், சம்பவம் இடம்பெற முன்னர் விமானத்தில் ஏற்பட்டகோளாறு தொடர்பாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்திருந்தாகவும் விமானப்படைப் பேச்சாளர் விங்கொமாண்டன் ஜனக்க நாணயக்கா இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

விமானத்தில் பயிற்சியாளர்கள், விமானி உட்பட நால்வர் பயணம் செய்ததாகவும் அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

விபத்துக்குள்ளான எம்ஐ 24 இன் ஒர் தொகுதியை படத்தில் காண்கின்றீர்கள்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com