Wednesday, November 18, 2009

2005 தேர்தல் பகிஷ்கரிப்பு விடுதலைப்புலிகளின் அவசர முடிவு -தமிழக முதல்வர் கருணாநிதி.

இலங்கையில் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டமை ஒரு அவசர முடிவாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவு, விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்திருந்த ரணில் விக்கிரமசிங்கவை மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க உதவியது என்று தெரிவித்த கருணாநிதி, அதிலிருந்து பேச்சுவார்த்தை முடக்கப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளார். பகிஷ்கரிப்பு கோரிக்கையை அடுத்து 7 லட்சம் தமிழர்கள் முற்றாக வாக்களிக்காத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரணில், விக்கிரமசிங்கவை 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குளால் வெற்றி பெற்றார். அன்றைய அவசர முடிவின் இன்றைய விளைவு என்ன? இன்று இலங்கை இராணுவத்தினால் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டுவது போல் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து இலங்கை பிரச்சினைக்காக தி.மு.க. நடத்திய அறப்போராட்டங்களும், எடுத்த வாதப்போராட்டங்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிலைகளையும், இருமுறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களையும் தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com