Tuesday, November 17, 2009

இலங்கையில் வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்த பிரான்ஸ் 160 கோடி அன்பளிப்பு.

இலங்கை சுகாதார அமைச்சின் வேண்டுதலை ஏற்று இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளின் தரத்தை உயர்த்த 160 கோடி ரூபாவை பிரான்ஸ் அரசாங்கம் அன்பளிப்பாக வழங்க முன்வந்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் அண்மையில் சுதாகதார அமைச்சில் கைச்சாத்தானது. இலங்கை அரசு சார்பாக சுகாதார அமைச்சின் செயலரும் பிரான்ஸ் அரசாங்கம் சார்பாக Euro-Formed Institute எனும் நிறுவனத்தின் தலைவரும் கையொப்பமிட்டுள்ளனர்.

இந்நிதியுதவியுடன் இலங்கையின் சகல பாகங்களிலுமுள்ள வைத்தியசாலைகளுக்கு அதி நவீன உபகரணங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment