Friday, November 27, 2009

வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த குழு 11 வயது சிறுமியை கற்பழித்த அகோரம்.

புத்தளம், பலவிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த மூவர் கொண்ட குழுவொன்று அவ்வீட்டில் இருந்த 11 வயது குழந்தைச் சிறுமி மீது பாலியல் வல்லுறவு புரிந்துள்ளனர். வீட்டில் இருந்த சிறுமியின் தந்தை மற்றும் பாட்டியை கட்டி வைத்த அக்குழுவினர் இப்பாதக செயலைப் புரிந்துள்ளனர்.

சிறுமி அலறிய சத்தம் கேட்டு வீட்டை சுற்றி வழைத்த அயலவர்கள் இருவரை மடக்கி பிடித்ததுடன் ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். மடக்கிப்பிடித்த இருவரையும் நையப்புடைத்து மரமொன்றில் கட்டி வைத்த கிராமத்தவர்கள் மறுநாள் காலை இருவரையும் பொலிஸில் பாரம் கொடுத்துள்ளனர்.

சிறுமியின் தாயார் மத்திய கிழக்கு நாடொன்றில் தொழில் புரிந்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com