பிக்குகளை கொன்று குவித்த கருணாவிற்கு இராணுவ வீரன் சலூட் அடிப்பதா? ஜேவிபி
மஹிந்த ராஜபக்ச அரசின் நாட்டுப்பற்று முன்னாள் புலிகளை அமைச்சர்களாக்கி புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து நாட்டைக்காப்பாற்றிய தளபதிகளை அமைச்சுக்களின் செயலாளர்கள் ஆக்குவதா என மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) பாராளுமன்ற சுனின் கன்டுநெத்தி, நேற்று (08) இரவு தெரண தொலைக்காட்சியில் இடம்பெறும் 'வட்டபிற்ற' (அக்கம்-பக்கம்) எனும் அரசியல் கலந்துரையாடல் நிகழ்சியின் போது வினா எழுப்பினார்.
அவர் அங்கு மேலும் பேசுகையில், நாட்டுபற்று தொடர்பாக அடிக்கொரு தடவை பேசும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு, முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை விளையாட்டுத்துறை அமைச்சின் செயலராக நியமித்துள்ளாதாக செய்திகள் தெரிவிக்கின்றது. ஆனால், புலிகளின் தலைவர் பிரபாகரனின் விசுவாசியும், அரந்தலாவையில் பிக்குக்கள் படுகொலை, தலதா மாளிகை குண்டுத்தாக்குதல், அனுராதபுரம் பௌத்த விகாரையில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் போன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டவருமான கருணாவை இதே அரசாங்கம் அமைச்சராக நியமித்திருக்கின்றது.
நாட்டின் சட்ட திட்டங்களின் படி அமைச்சர் ஒருவருக்கு செயலாளர் கீழ்படிய வேண்டும். அவ்வாறாயின் இந்நாட்டின் படையினரை சிறப்பாக வழிநடாத்தி நாட்டிற்கு வெற்றியீட்டித் தந்த இராணுவத் தளபதி ஒருவர் மேற்படி ஈனச் செயல்களில் ஈடுபட்ட பயங்கரவாதி ஒருவனுக்கு சலூட் அடிப்பாதா என ஆவேசமாக கேட்டார்.
0 comments :
Post a Comment