நோர்வே உளவுத்துறையினரின் வலையில் புலிகள்.
நோர்வேஜியர் இனவாதிகள் என்கின்றனர் நோர்வே தமிழர் அவையினர்:
நோர்வே மக்கள் இனவாதிகள் எனும் தொனியில் சிறுபாண்மை இனங்களுக்கான நோர்வேஜிய மொழியில் வெளிவரும் உத்துறுப் எனும் பத்திரிகையில் புலிகளின் முன்னணிச் செயற்பாட்டாளர்களால் எழுதப்பட்டதை தொடர்ந்து, நோர்வேஜிய மக்கள் நோர்வே தமிழரை உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் மனித நாகரிகம் அற்ற பிறவிகள் எனும் தொனியில் அந்நாட்டு ஊடகங்களில் வர்ணிக்க தொடங்கியுள்ளனர்.
குறிப்பிட்ட பத்திரிகை நோர்வே நாட்டில் வாழுகின்ற சகல சிறுபாண்மை இனங்களுக்குமான தமது சுதந்திரமான கருத்துக்களை வெளிக்கொணர்வதற்கான தளமாக அமைந்துள்ளது. இப்பத்திரிகைக்கான பூரண ஆதரவும் அனுசரணையும் அந்நாட்டு அரசினால் வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் இலங்கைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக தம்மை முன்னிறுத்திய புலிகள், தமிழ் மக்களின் கருத்துக்களாக தமது கருத்தினை இப்பத்திரிகையூடாக அந்நாட்டு சமூதத்திற்கு வழங்கி வந்திருந்தனர். புலிகள் சார்பாக புலிகளின் பிராந்திய பொறுப்பாளர் மயூரன் என்பவர் உத்துறுப் பத்திரிகையில் கடந்த பல வருட காலங்களாக செயலாற்றி வருகின்றார்.
இப்பத்திரிகையின் தமிழ் செய்தி நிர்வாகப் பொறுப்பாளரான மயூரன் நோர்வேயில் புலிகளால் நிறுவப்பட்டுள்ள நோர்வே மக்களவையின் முன்னணிச் செயற்பாட்டாளராக இருந்து வருகின்றார். அதேநேரம் குறிப்பிட்ட மக்களவையில் பேச்சாளர் கந்தையா நோர்வேயில் கடந்த இரண்டுவாரங்களுக்கு முன்னர் நடந்து முடிந்த தேர்தலில் தமிழ் மக்கள் குறிப்பிட்ட சில கட்சிகளுக்கு வாக்களிக்க கூடாது என தமிழ் மக்களை மிரட்டியிருந்தார். இவருடைய இவ்வேண்டுகோளானது சட்டவிரோதமானது என்ற அடிப்படையில் நோர்வே பொலிஸார் அவரை விசாரணைக்கு உட்படுத்தியிருந்தனர்.
தமிழ் தலைமைகள் இலங்கை மக்களுக்கு இனவாதம் கற்றுக் கொடுத்தாற்போல் குறிப்பிட்ட நோர்வே தமிழர் அவை நோர்வே வாழ் இலங்கை தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய எதிர்ப்பு வாதத்தை புகட்ட முனைகின்றதா என்ற கோணத்தில் நோர்வே பொலிஸார் தமது பார்வையை திருப்பியுள்ளனர்.
இவ்வாறு புலிகள் தமிழ் மக்கள் தஞ்சம் பெற்றுள்ள நாடுகளில் பொறுப்புணர்சி அற்று செயற்படுகின்றபோது அவற்றை மக்கள் தக்க சமயத்தில் இனம் கண்டு தடுத்து நிறுத்தாது அல்லது தட்டிக்கேட்காது போனால் இலங்கையில் புலிகளியக்கத்திற்கு நிகழ்ந்த வரலாறு ஐரோப்பிய மண்ணில் வாழும் அனைத்துப் புலிகளுக்கும் இடம்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை, என்பதுடன் அது தமிழ் மக்களின் இருப்பையும் காவு கொள்ளும் நிலை தோண்றும் எனவும் பலரும் அச்சம் தெரிவிக்கின்றனர்.
0 comments :
Post a Comment