Tuesday, October 6, 2009

சுவிஸ்வாழ் புங்குடுதீவு சுரேஸின் சுத்துமாத்துக்கள் ஆதரங்களுடன் சட்டத்தின் முன்..

புலிகளுடன் இணைந்து போராட்டத்தின் பெயராலும் மக்களின் பெயராலும் பல கோடி ரூபாய்களை சுருட்டிய பேர்வழிகளில் சுவிஸ்வாழ் புங்குடுதீவு சுரேஸ் எனப்படுபவரும் குறிப்பிடத்தக்கவர் ஆகும். இவர் கடந்த காலங்களில் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களிடம் பலவகையான செயற்திட்டங்களைக் கூறி பல லட்சத்கணக்கான சுவிஸ் பிராங்குகளை கையாண்டுள்ளதாக நம்பகரமாக தெரியவருகின்றது.

சுரேஸினுடை ஏமாற்று வித்தைகள் தொடர்வதை அவதானித்த இணையத்தளங்கள் மக்களை விழிப்படையச் செய்யும் பொருட்டு இவர் கடந்தகாலங்களில் மேற்கொண்டாக கூறப்படும் ஏமாற்றுக்களை நிரப்படுத்தி செய்திகளை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இச்செய்திகள் உண்மைக்கு புறப்பானவை என மக்களுக்கு விளக்கம் கொடுக்க முற்பட்ட சுரேஸ், இவர் தொடர்பான செய்திகளை தொடர்ச்சியாக வெளிக்கொணர்ந்த அதிரடி இணையத்தளத்திற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக, மக்களுக்கு தெரிவிப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

புலிகள் இயக்கம் இலங்கையில் செயலிழந்த பின்னர், இடைத்தங்கல் முகாம் மக்களுக்கு உதவபோவதாக சுரேஸ் சுவிஸ்வாழ் மக்களிடம் நிதிதிரட்டி மோசடி செய்துள்ளார். புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் என்ற அமைப்பின் பெயரால், இவரிடம் வழங்கப்பட்ட நிதி சம்பந்தப்பட்ட மக்களை சென்றடையவில்லை என்பதை உணர்ந்த மக்கள் அவரை நெருங்கி வழங்கிய பணத்திற்கு நேர்ந்த கதி என்ன என கேட்டபோது, அந்நிதி வவுனியா கோவில் குளத்தில் உள்ள சிவன் கோயில் நிர்வாகத்தினர் ஊடாக வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நலனுக்கு செலவிடப்படுவதாக தெரிவித்தள்ளார். இவற்றை அறிந்த சுவிஸில் உள்ள பொதுநலன் விரும்பிகள் சிலர் ஆலய நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட புங்குடுதீவு சுரேஸ் என்பவரால் ஆலய நிர்வாகத்தினருக்கு இடம்பெயர்ந்த மக்களை பராமரிப்பதற்காக பணம் வழங்கப்பட்டுள்ளதா என வினவியபோது அவர்கள் அவற்றை முற்றாக மறுத்துள்ளனர்.

அதையடுத்து ஆலய நிர்வாகத்தினருக்கு சுரேஸின் ஏமாற்று வித்தைகள் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் பெயரால் ஏமாற்றும் இப்பேர்வழிகள், தமது ஏமாற்று வித்தைகளுக்கு புனித ஆலயங்களையும் தம்முடன் இணைத்துக்கொள்வதை ஏற்க முடியாது என தெரிவித்த ஆலய நிர்வாகத்தினர், குறிப்பிட்ட நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு சுவிஸ்வாழ் நலன் விரும்பிகளை கேட்டுள்ளனர்.

அவ்வாறு ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டதற்கிணங்க சாட்சியங்கள் திரட்டப்பட்டு சுரேஸை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு சுவிற்சர்லாந்தில் ஏற்பாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. வவுனியா சிவன் கோவில் நிர்வாகத்தினர் ஊடாக தான் மக்களுக்கு உதவி புரிவதாக சுரேஸ் மக்களிடம் பணம் பெற்றதற்கான ஆதாரங்கள் பலவும் திரட்டப்பட்டுள்ளதுடன், பல மக்கள் சுரேஸூக்கு எதிராக சாட்சி சொல்லவும் ஆர்வமாக உள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com