வாவிமகள் இணையத்தள நாடாத்துனருக்கு கருணாவால் உயிர் அச்சுறுத்தல்.
வாவிமகள் எனும் இணையத்தளம் கருணா சார்பாக அவரின் விசுவாசிகளில் ஒருவரால் நாடாத்தப்பட்டு வருகின்றது. ஆனால் கடந்த காலங்களில் ஏற்பட்ட சில கசப்பான சம்பவங்கள் மற்றும் கருணா தொடர்பாக இணையங்களில் வெளியாகியிருந்த உண்மைகளில் அதிர்ச்சி அடைந்திருந்த குறிப்பிட்ட நபர் இணையத்தளத்தில் செய்திகளை பதிவேற்றுவதில் அக்கறை காட்டதாது தனது சொந்த விவகாரங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தனது குடும்ப நிலைமைகளை கருத்தில் கொண்டு, தொடர்ந்தும் ஏமாற்றுப் பேர்வழிகளின் வலையில் சிக்குண்டிராது மத்திய கிழக்குநாடு ஒன்றிற்கு சென்று தனது குடும்பத்தினரின் முன்னேற்றத்திற்காக உழைக்கும் நோக்கில் குறிப்பிட்ட இழைஞன் சாரதி அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்துவிட்டு கருணாவினுடனான தொடர்பை சிறிது குறைத்து ஒதுங்கி இருந்துள்ளார்.
ஜேர்மன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பியுள்ள கருணா குறிப்பிட்ட நபரை விலகிச் செல்வதற்கு எத்தனிப்பதை அறிந்து கொண்டதுடன் இளைஞனை அழைத்து, இணையத்தள செயற்பாடுகளை தொடர்ச்சியாக இடம்பெற வேண்டும் எனவும் தவறும் பட்சத்தில் பாரிய விளைவுகளைச் சந்திக்கநேரும் எனவும் மிரட்டியதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment