கிழக்கிலங்கையில் மீண்டும் அரசியல் கடை திறக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு.
பாராளுமண்றத் தேர்தல் நடைபெறும் முன்னரே புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து செண்ற கருனாவின் ஆசிர்வாதத்துடன் தேர்தல் களம் இறங்கிய மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட வேட்பளர்களில் ஜோசப் பரராஜசிங்கம் தவிர்ந்த ஜெயானந்தமூர்த்தி உட்பட அனைவருமே புலிகளின் ஏகபிரதிநிதிக்கொள்கைக்கு எதிரான கருத்தினை கொண்டிருந்த ஒரே காரணத்தால்தான் அவ்ர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.
புலிகளே தமிழ் மக்களின் ஒரே பிரதிநிதி எண்று இறுதிவரை மார்தட்டி நிண்ற ஜோசப் பரராஜசிங்கம் வரலாறு காணத தோல்வியைத் தழுவியதும் புலிகளின் ஏகபிரதிநிதித்துவக் கொள்கையை கிழக்கு வாழ் மக்கள் அங்கீகரிக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டியது.
இதில் ஒரு விடயத்தைக் குறிப்பிட்டேயாகவேண்டும் இண்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமண்ற உறுப்பினர்களாக உள்ள அரியநேந்திரன் மற்றும் சந்திரகாந்தன் ஆகியோர் முறையே கிங்ஸ்லி இராஜநாயகத்தை புலிகள் நயவஞ்சகமாக படுகொலை செய்ததன் மூலமும் மட்டககளப்பு மக்களால் அரசியலில் இருந்து தூக்கியெறியப்பட்ட பின்னர் புலிகளின் ஆசீர்வாத்ததுடன் பாராளுமண்றம் நுளைந்த ஜோசப் பரராஜசிங்கத்தின் வெற்றிடம் மூலம் பின் கதவால் பாராளுமணறத்திற்றுள் புகுந்தவர்கள் என்பதும் தெளிவான உண்மை.
கிழக்கில் புலிகளுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் தெருக்களிலும் மர நிழல்களுக்கு கீழும் உடுக்க உடையிண்றி உண்ண உணவிண்றி ஆதரவற்ற நிலையில் தமது தொகுதி மக்கள் சொல்ல முடியாத்துன்ப துயரங்களை அனுபவித்த காலங்களில் கொழும்பில் பாராளுமண்ற உறுப்பினர்கள் விடுதியில் உல்லாசமாக இருந்து கொண்டு வெறும் அறிக்கைகளை வெளியிட்டும் வெளி நாடுகளுக்கு விஜயம் செய்து புலிகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்தும் தமது குடும்பங்களை மேற்கத்தைய நாடுகளில் குடியமர்த்தியதுமே இவர்கள் கிழக்கு மாகாண மக்களுக்கு செய்த பெரும் காரியம்.
புலிகளின் விசுவாசிகளாக செயற்பட்ட இவர்களின் கொள்கை மாற்றம் காணவேண்டும் என்பதும் அதன் மூலம் அவர்கள் சுயமாக சிந்தித்து தத்தமது தொகுதி வாழ் மக்களுக்கு நேரடியான சேவைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் ஒரு சிலரது கருத்தாக இருந்ததில் தவறு இருப்பதாகக் கருதிவிடமுடியாது.ஆனால் இவர்கள் உண்மைகளை முழுமையாக மூடிமறைத்து தங்களுக்கு உயிர் அச்சுருத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பல கதைகளைக் கூறிவந்தார்கள்.
இவர்களை மீண்டும் தமது தொகுதிகளுக்கு வந்து மக்களின் தேவைகளை உணர்ந்து சேவைசெய்யுமாறு பலர் இவர்களுடன் தொடர்பு கொண்டதும் அவர்கள் நாட்கணக்கில் வாரக்கணக்கில் மாதக்கணக்கில் ஏன் வருடக்கணக்கிலும் காலத்தை வீணடித்துவந்தார்களே தவிர தமக்கு வாக்களித்த மக்களின் நலன்களை சிறிதளவும் சிந்திக்கத்துணியவில்லை என்பதே உண்மை.
இவர்களை மீண்டும் தமது பிரதேசங்களுக்கு அழைத்து அவர்களது சேவைதொடர இவர்களைத்தொடர்புகொண்ட சிலர் இலங்கையில் பேசுவதற்கு தயக்கமகவிருந்தால் பிறிதொரு நாட்டிலாவது சந்தித்து பேச பலதரப்பட்ட முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதை இவர்கள் இலகுவாக மறுத்துவிட முடியாது.புலிகளுக்கு அஞ்சியோ அல்லது புலிகளுக்கு விசுவாசமாக இருந்ததாலோ அவர்கள் கைகூடிய அனைத்து முயற்சிகளையும் அலட்சியம் செய்தனர்.
இண்று கிழக்கில் பாரிய மாற்றம் ஏற்படாவிட்டாலும் ஒருவகையான் இயல்புவாழ்க்கை துளிர்க்கத் தொடங்கியுருக்கிண்றது என்பதுமட்டுமல்ல கிழக்கிலங்கை வாழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மாகாண அரசாங்கம் தன்னாலான பல அபிவிருத்திட்டங்களையும் தொழில் சார் அபிவிருத்திகளையும் மேற்கொண்டு மூவின மக்களும் பரஸ்பர புரிந்துணர்வுடன் வாழ்க்கை மாற்றமும் ஏற்படத்தொடங்கியிருக்கிண்றது.
தற்போது வட மாகாண சபை தவிர்ந்த அனைத்து மாகாணங்களிலும் தேர்தல்கள் நடாத்தப்பட்டு அடுத்தது பாராளுமண்றத் தேர்தல் என்பதை மிகத்தெளிவாக உணர்ந்து மீண்டும் தமது பாராளுமண்ற ஆசனங்களைத் தக்கவைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும் ஒருவகை காய் நகர்த்தலே இவர்களது மீள் பிரவேசம் என்பதை கிழகிலங்கை வாழ் மக்கள் மிகத் தெளிவாகப்புரிந்துகொள்வார்கள் என்பதில் சந்தேகம் கிடையாது..
புலிகள் அழிக்கப்பட்டாகிவிட்ட நிலையில் இவர்களிடம் என்ன கொள்கை இருக்கிண்றது?
வாக்களித்த மக்களுக்கு இவர்கள் செய்துமுடித்த சேவைகள் என்ன?
என்ன விடயத்தை சொல்லி மக்களிடம் வாக்குக் கேட்பது?
இவற்றில் ஒண்றிற்காவது இவர்களிடம் பதில் இல்லாத நிலையில் கிழக்கில் பலம் பொருந்திய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது நாடுகடந்த தமிழீழ அரசுக் கதை சொல்லி மக்களை ஏமாற்ற முயல்வதா இவர்களது நோக்கம் என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டும்.
பாராளுமண்றத் தேர்தல் அல்ல கிராமசபைத் தேர்தலாக இருந்தாலும் இவர்களால் மக்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதை எதிர்வரும் தேர்தல்கள் இவர்களுக்கு உணர்த்தும் காலம் வெகுதொலைவில் இல்லை.
எஸ்.எஸ்.கணேந்திரன்
0 comments :
Post a Comment