இடைத்தங்கல் முகாம்களுக்குச் செல்ல அனுமதி கோரி எம்பி க்கள் நீதிமன்றில்.
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தது, இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைத்துள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட அனுமதிகோரி ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கொழும்பு உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
அவ்வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிரதிவாதிகள் சார்பாக ஆஜராகியிருந்த அரச தரப்பு வக்கீல் இவ்விடயம் நிர்வாக மட்டத்தில் தீர்த்து வைக்கப்பட முடியுமா என நீதித் துறை அமைச்சர் ஆலோசித்து வருவதாக தெரிவித்தார். வழக்கு எதிர்வரும் 27ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இடைத்தங்கல் முகாம்களுக்கு வெளிநாட்டவர்கள் சென்று தமது தொண்டினை ஆற்ற அனுமதிக்கப்பட்டுள்ளபோது, மக்களின் பிரதிநிதிகளான தாம் அங்கு செல்ல முடியாதுள்ளதாக மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment