தலிபான் பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ ஐ.எஸ்.ஐ., உத்தரவு
இந்தியாவுக்குள் ஊடுருவுமாறு, பாகிஸ்தானில் உள்ள ஐ.எஸ்.ஐ., அமைப்பு, தலிபான்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாக, இந்திய புலனாய்வுத் துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவை அடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவ, தலிபான்கள் 60 பேர் தயாராக இருப்பதாக, புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. "இந்தியாவுக்குள் ஊடுருவவில்லை எனில், கைது செய்து சிறையில் அடைக்கப் போவதாக, தலிபான்களுக்கு ஐ.எஸ்.ஐ., மிரட்டல் விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் முகாமிட்டுள்ள 350 தீவிரவாதிகளில், இந்த 60 பேர் அடங்குவர்' எனவும், புலனாய்வு தகவல் தெரிவிக்கிறது.
இந்த ஊடுருவலைத் தடுக்க, சர்வதேச எல்லையிலும், கட்டுப்பாட்டு எல்லையிலும், இந்திய ராணுவம், பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது.
"தீவிரவாதிகளை எதிர்கொள்ள உள்ள இந்திய வீரர்களுக்கு, எதிர்வரும் 15 நாட்கள், மிகக் கடுமையான நாட்களாக அமையப் போகின்றன' என, புலனாய்வுத் துறை அதிகாரிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் காஷ்மீருக்குள் தலீபான் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சிப்பதாக வெளியான தகவல் அடிப்படை ஆதாரமற்றது என்று மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment