லண்டனில் உண்ணாவிரதம் இருந்த பரமேஸ்வரன் மெக்டொனால்ட பர்கர்களை வயிறு நிறைய உண்டார்
பொலிஸாரின் விசேட கமராக்களை ஆதாரமாக கொண்டு லண்டன் பத்திரிகைகள் செய்தி
புதுமாத்தளன் பகுதியில் யுத்தம் உக்கிரம் அடைந்திருந்த போது பிரபாகரனையும் புலிகளியக்கத்தினரையும் காப்பாற்றும் நோக்கில், உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும் என்று கோரி லண்டனில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்திய தமிழ் இளைஞர், மெக் டோனால்ட்ஸ் பர்கர்களை சாப்பிட்டதாக லண்டன் பொலிஸாரின் விசேட கமராப் பதிவுகளை ஆதாரமாக கொண்டு பிரிட்டிஷ் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டுள்ளது.
லண்டனில் ஏப்ரல6 முதல் ஜூன்17 வரை இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பெரிய அளவிலான போராட்டங்கள் இலண்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்துக்கு முன்பு நடைபெற்றது. இவ்போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிசாருக்கு மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்காக லண்டன் அரசாங்கம் 7.1 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது.
இது ஒரு திட்டமிட்ட சதி என்றும் இந்த செய்திகளை வெளியிட்ட இரண்டு நாளிதழ்களுக்கு எதிராக தான் வழக்குத் தொடரப் போவதாகவும் உண்ணாவிரத சர்ச்சையில் சிக்கியுள்ள பரமேஸ்வரன் சுப்பிரமணியன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
உலக நடைமுறைகளுக்கு மாறாக உலக பயங்கரவாதி ஒருவனை காப்பாற்றுவதற்காக அகிம்மை எனும் பெயரைகொண்டு போராட்டம் ஒன்று நாடாத்தப்பட்டபோது அதற்கு ஒத்துழைப்பும் பாதுகாப்பும் வழங்கிய லண்டன் பொலிஸார் என்ன தேவைக்காக அவ்வாறு பொய்படப்பிடிப்புக்களை வெளிவிடவேண்டும் என்பது கேள்வியாகும். தூம் தவறு செய்தால் அவற்றை ஏற்று மன்னிப்புக் கோருவதை விடுத்து வழக்குப் போடப்போகின்றேன் என மிரட்டுவதனால் மேலும் நிலமைகள் சிக்கலடையும் என்பதுடன் லண்டன் பொலிஸார் வழக்கு தொடங்கினால் அவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏதோ ஒவ்வொரு வழியில் குற்றவாளிகளாக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்து கொள்ளவேண்டும்.
அகிம்சையை கொச்சைப் படுத்திய குறிப்பிட்ட நபரின் செயலினால் ஒட்டுமொத்த தமிழினமும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் நியாயமான கோரிக்கைக்களுக்காக தமிழர் அகிம்சை போராட்டம் ஒன்றை தொடங்கும் போது அவர்களை ஏளமாக பார்க்கும் நிலைமை தோன்றியுள்ளது.
0 comments :
Post a Comment