வன்னி வைத்தியர்கள் கடமைக்கு திரும்பியுள்ளனர்.
புதுமாத்தளன் பகுதியில் இறுதி யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் இருந்து சிறிலங்கா இராவத்தினரால் மனிதபேரவலம் மேற்கொள்ளப்படுவதாக சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்திருந்த வைத்தியர்கள் நால்வர் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் நிபந்தனையுடனான பினையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் நால்வரும் நேற்றில் இருந்து வடமாகணத்தில் சேவையில் இணைந்துள்ளனர்.
இவர்களில் கிளிநொச்சி மாவட்ட சுகாதார சேவைகள் இயக்குனராக செயற்பட்டுவந்த டாக்டர் சத்தியமூர்த்தி தான் வடமாகாண மேலதிக சுகாதார இயக்குனராக நியமனம் பெற்றுள்ளதாக பிபிசி தமிழ் ஓசைக்கு தெரிவித்துள்ளார்.
அத்துடன் டாக்டர் வரதாராஜா மாகாண திட்டமிடல் வைத்திய அதிகாரியாகவும், டாக்டர் சண்முகராஜா வவுனியா மாவட்ட அதிகாரியாகவும் நியமனம் பெற்றுள்ளதாகவும் டாக்டர் இளஞ்செளியன் மேற்படிப்புக்;காக பல்கலைக்கழகம் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் இன்றைய நிலைமைகளையிட்டும் தாம் மீண்டும் வேலைக்கு திரும்புவதையிட்டும் மிகவும் சந்தோசமடைவதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment