"சுவிஸ்சுரேஸ்" சுத்துமாத்துப் பேர்வழி என்கிறது அறங்காவலர் சங்கம்..!
புலிமுகவர்களில் புதிதாய் புத்துயிர் பெற்ற புங்குடுதீவைச் சேர்ந்த சுவிஸ்சுரேஸ் என்பவர் புங்குடுதீவு மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காய் முகாம்களில் உள்ள மக்களுக்கு தான் உதவப் போவதாக கூறி பணவசூலில் ஈடுபட்டமை. புங்குடுதீவுக்கும் புங்குடுதீவுவாழ் மக்களுக்கும் உதவப் போவதாக கூறிக்கொண்டு புங்குடுதீவு மக்களிடம் காசுகளை கறந்து தங்களுடைய சுயதேவைகளை நிறைவேற்றி வருகின்றமை, மேல் மருவத்தூர் அம்மன் கோயிலை சுவிஸில் அமைக்கப் போவதாக சொல்லி பல இலட்சம் பிறாங்குகளை சுவிஸ்வாழ் தமிழர்களிடமிருந்து சேகரித்து அந்த பணத்தை முழுமையாக ஏப்பம் விட்டமை, தடுப்பு முகாம்களில் முள்ளுக்கம்பிகளுக்கு இடையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களின் அவலநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி தன்னுடைய அவலக்குரலில் “முகாரி ராகம்பாடி” அதை இறுவட்டு மூலம் வெளியிட்டு மக்களிடம் பணம் சம்பாதிக்கின்றமை தொடர்பில் ஏற்கனவே ஊடகங்கள் மூலம் தெரிவித்திருந்தோம்..
வவுனியா நலன்புரி முகாம்களுக்கு எவரும் தன்னிச்சையாகச் செல்லவோ பார்வையிடவோ எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடவோ முடியாதென்பதை குறிப்பிட்டு நாம் வெளியிட்ட இச்செய்தியினையடுத்து குறித்த சுவிஸ்சுரேஸ், வவுனியா கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகமே தங்களிடம் உதவி வழங்குமாறு கேட்டதென்றும் அதன் காரணமாகவே தாம் இறுவெட்டு(சீ.டீ)க்களை வெளியிட்டு இடம்பெயர்ந்த வன்னி மக்களுக்காக நிதிசேகரிப்பில் ஈடுபடுவதாகவும் ஊடகங்களிடம் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகின்றார்.
இதுதொடர்பில் வவுனியா கோயில்குளம் சிவன்கோவில் நிர்வாகத்தினரிடம் அதிரடி இணையதளத்தினர் உட்பட பல ஊடகங்களைச் சேர்ந்த பலரும் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறு எவரும் தமக்கு உதவி செய்யவில்லையென்றும், லண்டன் கனகதுர்க்கையம்மன் ஆலய நிர்வாகமும், அவுஸ்திரேலியாவில் உள்ள ஓர் அமைப்பினரும் மற்றும் ஜெர்மனியிலிருந்தும் தனிப்பட்ட ஒருசிலருமே தமக்கு உதவி வருவதாகவும், சுவிசிலிருந்து எவரும் இவ்வாறான உதவிகளைச் செய்யவில்லையென்றும், சிவன்கோயில் நிர்வாகத்தினர் உதவி கேட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமையானது உண்மைக்குப் புறம்பான தகவல் என்றும் தெரிவித்துள்ளனர். இவ்வியடம் தொடர்பில் சிவன்கோயில் நிர்வாகத்தினர் எழுத்து மூலமாகவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வவுனியா கோயில்குளம் சிவன்கோயில் நிர்வாகத்தினரும், அதிலுள்ள அறங்காவலர் சபையினரும் வடக்கில் மோதல்கள் இடம்பெற்றவேளையில் மக்கள் பெருமளவில் வவுனியா நோக்கி இடம்பெயர்ந்த போது பல்வேறு உதவிகளை செய்வதில் முன்நின்று செயற்பட்டவர்கள். இடம்பெயர்ந்த மக்களில் கர்ப்பணிகள், சிறுவர்கள், குழந்தைகள், முதியோர் ஆகியோர்க்கு பல்வேறு வழிகளிலும் உதவிகளை தொடர்ந்து மேற்கொண்டும் வருகின்றனர். தவிர இறுதிக்கட்ட மோதல்களின் போது மிகத் தொகையிலான மக்கள் வன்னியிலிருந்து ஒரேயடியாக இடம்பெயர்ந்தபோது அவர்களுக்கு சமைத்த உணவினை வழங்குவதில் கணிசமான பங்களிப்பினை சிவன்கோயில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர்.
தற்போதும் முகாம்களிலுள்ள முதியர்கள் பலரைப் பொறுப்பெடுத்து பராமரித்து வருகின்ற இவர்களின் பணியானது மிகவும் வரவேற்கத்தக்கதும், நன்றியுணர்வோடு பாராட்டக்கூடியதுமான விடயமாகும். இதுதவிர தற்போது செட்டிகுளம் நலன்புரி நிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டுவரும் கர்ப்பிணிகள், தாய்மார் குழந்தைகளைக் கூட பொறுப்பெடுத்து உணவு உள்ளிட்ட உதவிகளைப் புரிந்த அவர்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்லும் வரையிலான உதவிகளைச் செய்வதிலும் சிவன்கோயில் நிர்வாகத்தினர் கணிசமானளவு பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சுவிஸ்சுரேஸ் போன்றவர்கள் சிவன்கோயில் நிர்வாகத்தினரின் பெயரை தமது சுயநலத்திற்காக பயன்படுத்துவதானது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
சிவன்கோயில் நிர்வாகத்தினருக்கும் அறங்காவலர் சபையினருக்கும் சுவிஸ்சுரேஸ் உள்ளிட்ட குழுவினர் அவப்பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையிலேயே இவ்வாறான செயலைப் புரிகின்றனர். தாம் சுருட்டிய மற்றும் சுருட்டவுள்ள பணத்தை சிவன்கோயில் நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க சேகரித்து வழங்கவுள்ளதாக பொய்க் கதையொன்றினை சோடித்துள்ளனர். இது மிகவும் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டியதொன்றாகும். இதனை நாம் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
அவலநிலையிலுள்ள இடம்பெயர்ந்த மக்களின் பெயரைப் பயன்படுத்தி சுயநலனுக்கான நிதிவசூல் செய்வது, மட்டுமல்லாது புனித சேவையைப் புரிகின்ற சிவன்கோயில் நிர்வாகத்தினர் மற்றும் அறங்காவலர் சபையின் பெயர்களைப் பயன்படுத்துவது என்றுமே ஏற்றுக் கொள்ளத்தக்க விடயமல்ல என்பதையும் நாம் சுட்டிக் காட்டுகின்றோம்.
-சுவிஸ்வாழ் புங்கையூர் மக்கள் ஒன்றியம்!!
0 comments :
Post a Comment