சிறிரெலோ வின் புதியபாதை கருணாவின் வழியில்.
தமிழீழ விடுதலை இயக்கம் எனப்படும் ரெலோ வில் இருந்து பிரிந்து சென்ற சிறிரெலோ அணியினர் தாம் புதியதாயகம் எனும் அரசியல் அமைப்பொன்றினை நிறுவியுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது. அவ் அமைப்பு உருவாகி ஒரு மாதம் முடிவதற்குள் அவ்வமைப்பில் இருந்த முக்கியமான புள்ளிகள் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துள்ளனர்.
அவ்வாறு இணைவந்து கொண்டவர்களில் திருமலை மாவட்ட பொறுப்பாளராக இருந்த சிவம் என்பவருடன் சிலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுள்ளனர். இவர்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து செயற்பட்டுவருவதாகவும், அவரின் உதவியுடன் அங்குள்ள மக்கள் பலர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுள்ளனர்.
அதே நேரம் சிறிரெலோ அணியில் எஞ்சியுள்ள சிலர் மீண்டும் அடைக்கலநாதன் தலமையிலான ரெலோவினருடன் இணைந்து செயற்பட பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வவுனியா, யாழ் உள்ளுராட்சி தேர்தல் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து சென்று சிறிரெலோ சார்பாக பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டிருந்த அவ்வியக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் மன்னார் மாவட்ட பேராயரின் மத்தியஸ்தத்துடன் செல்வம் அடைக்கலநாதனுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment