Tuesday, October 6, 2009

புளொட் தலைவர் சித்தார்த்தனது பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான திரு. சித்தார்த்தன் அவர்களுக்கு அரசினால் வழங்கப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு நேற்று நண்பகல் உடன் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திரு. சித்தார்த்தன் அவர்களது பாதுகாப்பிற்காக நான்கு பொலிஸார் நியமிக்கப்பட்டிருந்தனர், அவர்களில் ஒருவர் கடந்த 14 வருடங்களாக சித்தார்த்தன் அவர்களின் பாதுகாப்பு அதிகாரியாக செயற்பட்டு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப் பொலிஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டமைக்கான காரணம் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு இதுவரை தெரிவிக்கப்படவில்லை என தெரியவருகின்றது. அத்துடன் வடகிழக்கில் இயங்கிவரும் ஈபிஆர்எல்எப், புளொட் அமைப்பு காரியாலங்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பும் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com