குருநாகல் பிரதேசத்தில் குண்டு வெடிப்பு இருவர் பலி 12 பேர் காயம்.
குருநாகல் உடுவப்பொலவில் உள்ள சுமணதாச மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான வானின் சாரதி மற்றும் வானில் இருந்த 12 வயதுடைய மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் 12 பேர் காயங்களுக்கு உள்ளாகி உள்ளனர். காயமடைந்துள்ளவர்களில் ஒரு மாணவியின் கால் முற்றாக துண்டாடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் நால்வர் வயது வந்தவர்கள் எனவும் 8 பேர் மாணவர்கள் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
பாடசாலை சேவையில் ஈடுபடும் குறிப்பிட்ட வான், மாணவர்களை ஏற்றிக் கொண்டு உரிமையாளரின் வீட்டு தரிப்பிடத்தில் இருந்து புறப்பட முற்பட்டபோது குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. இக்குண்டு குறிப்பிடத்தக்களவு சக்திவாய்ந்ததாக காணப்படுவதுடன் அது வானில் பொருத்தப்பட்டிருந்தாக அன்றில், வெளியே இருந்து வீசப்பட்டதாக என்பது இதுவரை தெளிவாகவில்லை. எது எவ்வாறாயினும் இக்குண்டு வெடிப்பானது தனிப்பட்ட போட்டிகள் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment