Sunday, September 6, 2009

TNA ஜனதிபதியுடன் IDP s சம்பந்தமாக பேசப்போகின்றார்களாம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் நாளை பிற்பகல் 4.30 மணியளவில் அலரிமாளிகையில் இடம்பெற உள்ள கலந்துரையாடலில் இடைத்தங்கல் முகாம் மக்கள் தொடர்பாக தாம் பேச உள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியுள்ளார்.

புலிகள் இயக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் தாமாவே ஜனாதிபதியிடம் நேரம் ஒன்றை பெற்றுக்கொண்டு கலந்துரையாடல்களுக்குச் செல்லும் கூட்டமைப்பினர், இச்சந்திப்பினை தமது அரசியல் எதிர்காலத்தினை மாற்றி அமைப்பதற்காக ஏற்படுத்தியுள்ளதாக பலராலும் சந்தேகிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களில் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு தாம் நிபந்தனைகளை வைத்திருப்பதாக கூறிவந்திருந்தனர். ஆனால் நாளை இடம்பெறப்போகும் சந்திப்பில் எந்த நிபந்தனையுடன் ஜனாதிபதியைச் சந்திக்கின்றனர் என்பதை இதுவரை மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எனவே இதுவரை காலமும் புலிகளுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நாடத்தியா வரலாற்றுப்பதிவுகளுடன் மேலும் அத்தியாங்களை சேர்த்துக்கொள்ளாமல் தமிழ் மக்களின் நலனில் நின்று செயற்படவேண்டும் என அனைவரும் எதிர்பார்கின்றனர்.

No comments:

Post a Comment