மஸ்கெலிய யுவதிகள் கொலைச் சந்தேக நபர்களுக்கு எதிராக இரு குற்றச்சாட்டுக்காளாம்.
கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் உள்ள வீடொன்றில் வேலைக்கமர்த்தப்பட்டிருந்த மஸ்கெலிய பிரதேசத்தைச் சேர்ந்த இரு யுவதிகளின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள இருவருக்கும் எதிராக மேலும் இரு குற்சஞ்சாட்டுக்களைப் பதிவு செய்யப்போவதாக கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸார் கொழும்பு பிரதான மஜிஸ்றேட் நிசாந்த கப்புஆராச்சிக்கு தெரிவித்துள்ளனர்.
சிறு வயதினாரான யுவதிகளை வேலைக்கமர்த்தியமை மற்றும் அவர்களை வேலைக்கமர்த்திய பின்னர் பிரதேச பொலிஸாருக்கு அறிவிக்காமை என்பனவே அவர்கள் மீது சுமத்தப்படவிருக்கும் குற்றச்சாட்டுக்களாகும். அவசரகாலச் சட்டத்தின் கீழ் வீடுகளில் ஒருவரை வைத்திருக்கும் போது வீட்டு உரிமையாளர்கள் பிரதேச பொலிஸாருக்கு அறிவிக்கவேண்டும் எனவும் அவர்கள் அவ்வாறு செய்யத்தவறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
எது எவ்வாறாயினும் பொலிஸார் இவ்விசாரணைகளை திசை திருப்புவது மிகவும் தெளிவாக அவதானிக்கப்படுகின்றது. மேற்படி குற்றச்சாட்டுக்களுக்காக குற்றவாளிகக்கு பெரும் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. அத்துடன் சந்தேக நபர்கள் மீது கொலைக் குற்றஞ்சுமத்துவதற்கு பதிலாக சில குற்றங்களைச் சுமத்தி அவர்களை பொலிஸார் விடுவிக்க முயல்வது புலனாகின்றது. மேலும் குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் செயற்படும் பொலிஸார் யுவதிகள் கொலைசெய்யப்படுவதற்கு இரு தினங்களுக்கு முன்னர் அவ்வீட்டில் இருந்து வெளியேறி விட்டதாக நீதிமன்றிற்கு தெரிவிக்க முனைவதை அவதானிக்கவும் முடிகின்றது.
0 comments :
Post a Comment