எந்த சூழ்நிலையிலும் மஹிந்தவை தோற்கடிக்க நாம் தாயாராக இருக்கின்றோம். ஜேவிபி.
ஜனாதிபதி மஹிந்தவிற்கு மேலுமொரு ஜனாதிபதித் தேர்தலை நாடாத்துவதற்கு அதிகாரம் கிடையாது. அவ்வாறு அவர் அதை நடாத்துவேரேயானால், அவரை எந்த சூழ்நிலையிலும் தோற்கடிப்பதற்கு ஜே.வி.பி யினராகிய நாம் தயாராக இருக்கின்றோம் என கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
"ஜனாதிபதி ஆட்சி முறை ஏன் ஓழிக்கப்படவேண்டும்" என மக்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு நேற்று கொழும்பு கோட்டை ரெயில் நிலையத்திற்கு முன்னால் துண்டுப்பிரசுரங்களை வினியோகிக்கும் நிகழ்வு ஒன்று ஜேவிபி யினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது அங்கு கலந்து கொண்டு மக்களுக்கு உரையாற்றிய ரில்வின் சில்வா மேற்காண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், ஜேவிபி யானது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாததும் நடைமுறைச்சாத்தியம் அற்றதுமான பேரம்பேசல்களுக்கு செல்வதில்லை. ஆனால் கட்சியினால் எடுக்கப்படுகின்ற முடிவுகளுக்கான வெற்றிக்காக அது அயராது உழைக்கும்.
ஐக்கிய தேசியக்கட்சி நாட்டின் ஒருபகுதியை கூறுபோட்டு விற்க முற்பட்டபோது நாம் அவர்களை தோற்கடிப்பதற்கு முடிவு செய்தோம். அவ்வாறே 6 வருடங்களுக்காக ஆட்சிக்கு வந்த அவர்களை இரண்டே இரண்டு வருடங்களில் வீடுகளுக்கு அனுப்பினோம்.
யுத்த நிறுத்த ஒப்பதந்தத்திலிருந்து விலகுமாறு அரசைவேண்டினோம், அதை செய்து முடித்தோம்.
பி-ரொம் எனும் ஒர் முறையை ஜனாதிபதி சந்திரிக்கா கொண்டுவந்தார். அதை இல்லாமல் பண்ணுமாறு அவரை வேண்டினோம். ஆனால் அவர் இணங்கவில்லை, நாம் அமைச்சுப்பதவிகளை தூக்கியெறிந்து அரசில் இருந்து வெளியேறியதுடன் பி-ரொம் ஐ இல்லாது செய்தோம்.
இணைந்திருந்த வட-கிழக்கை பிரிப்பதற்கு முடிவு செய்தோம். அதுவிடயமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் பேசினோம், அவர் இணங்கவில்லை. நாம் மக்களுடன் சேர்ந்து எமது தீர்மானத்திற்கு சட்டரீதியாக வெற்றியை பெற்றோம்.
இவ்வாறு, ஏனையவர்கள் முடியாத காரியம் என நினைத்த விடயங்கள் பலவற்றில் நாம் வெற்றி கண்டுள்ளோம். அவ்வாறே நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதிலும் வெற்றி காண்போம் என்று கூறினார்.
0 comments :
Post a Comment