Wednesday, September 9, 2009

போலி விசாவில் பாரிஸ் செல்ல முயன்ற அறுவர் ஹைட்றாபாத் இல் கைது.

ராஜிவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக போலி விசாவில் பிரான்ஸ் செல்ல முயன்ற 6 இலங்கைத் தமிழர்கள் உட்பட ஏழுபேர் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவர் யாழ்பாணத்தையும் ஏனையோர் இலங்கையின் இதர பாகங்களையும் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களில் ஒரு பெண்ணும், ஒரு இந்தியரும் அடங்குகின்றனர்.

இன்று காலை பாரிசிற்கு புறப்படவிருந்த எமிறேட்ஸ் எயார் லைன் க்குச் சொந்தான விமானத்தில் புறப்பட இருந்த இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது, இலங்கையில் இருந்து தமிழ்நாடு சென்ற அவர்கள் அங்குள்ள பயண முகவர் ஒருவரின் துணையுடன் பொய்பெயர்களில் இந்தியக் கடவுச் சீட்டுக்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன் அக்கடவுச் சீட்டுக்களுக்கு பிரான்சுக்கான போலி வீசாக்களையும் பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.

இவர்களுடன் கைதுசெய்யப்பட்டுள்ள இந்திய நபரே இவர்களுக்கான பயண ஏஜென்ட என நம்பப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com