Friday, September 18, 2009

மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரதம்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் காரியாலயத்தை அகற்றக்கோரி உண்ணாவிரதம் இருக்கும் இளைஞர்களின் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

திருக்கோவில் மத்திய சந்தைக்கு முன்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றுக் கொண்டிருக்கின்ற நான்கு இளைஞர்களுக்கு ஆதரவு கொடுக்குமகமாக அக்கரைப்பற்று , கோமாரி , கல்முனை போன்ற பிரதேசங்களிலிருந்து ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் ஒன்றுகூடியிருப்பதை அவதானிக்க முடிகின்றது.

சாகும்வரை உண்ணாவிரதத்தில் இருக்கின்ற நான்கு இளைஞர்களின் உடல் நிலை மோசமடைந்து வருவதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனால் இதுவரை இவ் உண்ணாவிரதம் இருக்கும் மக்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவரும், கிழக்கு மகாண முதலமைச்சருமான சந்திரகாந்தன் தனது பார்வையை திருப்பவில்லை என தெரியவருகின்றது.

அகிம்சை வழியில் போராட்டம் ஒன்று தொடர்கின்றபோது, ஜனநாகயக வழிமுறைப்படி போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பது வழக்கமாகும். ஆனால் மக்களுக்காக அரசியலில் இறங்கியுள்ளதாக கூறுகின்ற குறிப்பிட்ட அரசியல்வாதிகளுக்கு அகிம்சைப் போராட்டத்தின் தார்ப்பரியம் தெரியாமல் அவற்றை உதாசீனம் செய்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com