Sunday, September 6, 2009

அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக ஜேவிபி மீள் பரிசீலினை.

இலங்கையில் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்திற்கு பாராளுமன்றில் ஆதரவு வழங்குவது தொடர்பாக கட்சி மீள் பரிசீலினை செய்யவுள்ளதாக ஜேவிபி யின் பாராளுன்ற உறுப்பினர்கள் குழுத்தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். எதிவரும் வியாழக்கிழமை பாராளுமன்று கூடுவதற்கு முன்னர் தமது கட்சி இது தொடர்பான புதிய முடிவொன்றை எடுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் புலிகள் இயக்கம் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் அவசரகாலச் சட்டம் நீக்கப்படவேண்டும் என்பது எதிர்கட்சிகளின் எதிர்பார்பாக இருந்து வந்தபோதிலும் ஜேவிபி அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாகவே வாக்களித்து வந்தது. ஆனால் சில தினங்களுக்கு முன்னர் ஜேவிபி சார்பு பத்திரிகையான லங்கா நியூஸ் பேப்பர் எனும் பத்திரிகையின் ஊடகவியலாளர்கள் மூவர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை அடுத்தே அக்கட்சி தமது முடிவை மீள்பரிசீலினை செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment