ஐ.நா அதிகாரியின் வீசா ரத்து : புலிகளுக்கு ஆதரவாக பேசினாராம்.
ஐ.நா வின் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைகான பேச்சாளர் ஜேம்ஸ் எல்டெர் இனது இலங்கைக்கான வீசா ரத்துச் செய்யப்பட்டுள்ளமையை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி அபயக்கோண் உறுதி செய்துள்ளார். திரு. எல்டெர் புலிகளியக்கத்திற்கு ஆதரவான கருத்துக்களை தெரிவித்து வந்தமையினால் அவரது வீசா இன்றுடன் (07ம் திகதி செப்டம்பர்) ரத்துச் செய்யப்பட்டு நாட்டைவிட்டு வெளியேறுமாறு பணிக்கப்பட்டிருந்த நிலையில் ஐ.நா கால அவகாசம் கேட்டிருந்ததற்கு இணங்க வீசா 21ம் திகதி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கப்ட்டுள்ளாக தெரிவித்துள்ளார்.
திரு. எல்டெர் உண்மைக்குப் புறப்பானதும் புலிகளுக்கு ஆதரவானதுமான கருத்துக்களை ஊடகங்களுக்கு வழங்கி வந்ததாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலர் பாலித்த ஹோகன்ன லண்டன் பிபிசி க்கு தெரிவித்துள்ளார்.
அதேநேரம் யுனிசெப் இன் பிராந்தியத் தலைவர் சாறா குறோவ் அவர்கள் பிபிசி க்கு கருத்து தெரிவிக்கையில், திரு எல்டெர் அவர்கள் இலங்கையில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்கள், பெணக்களுக்காக குரல் கொடுத்து வந்ததாகவும் அவரது சேவை அம்மக்களுக்கு தொடர்ந்து கிடைக்கப்பெற வழிகிடைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment