Monday, September 7, 2009

கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயுதங்களுடன் தரை இறங்கிய ஐக்கிய அரபு நாட்டு விமானம்:


ஊழியர்களை கைது செய்து விசாரணை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடான அபுதாபியில் இருந்து சீனாவில் உள்ள ஹன்யாங் நகருக்கு ஒரு ராணுவ விமானம் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு சென்றது.

செல்லும் வழியில் எரிபொருள் (பெட்ரோல்) தேவைப்பட்டது. எனவே அவற்றை நிரப்ப கொல்கத்தாவில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது.

அந்த விமானத்தில் ஊழியர்கள் 9 பேர் இருந்தனர். தகவல் அறிந்ததும் சுங்க துறை அதிகாரிகள் விரைந்து சென்று விமானத்தில் சோதனை நடத்தினர்.

அதில் ஆயுதங்கள், வெடி பொருட்கள் போன்றவை இருந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் விமானத்தில் இருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.

ஆனால் அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. எனவே அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து நள்ளிரவில் விமான நிலைய அதிகாரிகள், சுங்க இலாகா அதிகாரிகள் உள்ளிட்டோரின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இதைத் தொடர்ந்து நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு அந்த விமானம் நேற்று காலை திரும்பி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com