உதயசூரியன் விளையாட்டுக்கழகம் வெற்றிக் கிண்ணத்தை தட்டிக்கொண்டது.
திருக்கோவில் பிரதேச வினாயகபுரம் மின்னொளி விளையாட்டுக் கழகத்தின் 31 ஆவது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற, அணிக்கு ஏழு பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிறிக்கெற் சுற்றுப் போட்டியில் மொத்தம் 26 விளையாட்டுக் கழகங்கள் பங்கு பற்றின. இறுதிப் போட்டிக்கு திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகமும் தம்பிலுவில் எதிரொளி விளையாட்டுக்கழகமும் தெரிவுசெய்யப்பட்டன. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் முதலில் துடுப்பெடுத்தாடி 81 ஓட்டங்களை அபாரமாக குவித்தது. இதில் 14 பந்து வீச்சுகளுக்கு 47 ஓட்டங்களை சின்னத்தம்பி துஸ்யந்தன் பெற்றுக்கொண்டார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எதிரொளி அணியானது தயாநிதி சுதர்சன் அவர்களின் அதிவேக பந்துவீச்சுக்கு முகம் கொடுக்க முடியாமல் 3.4 பந்துவீச்சுகளில் சகல விக்கற்றுக்களையும் இழந்து 25 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இப் போட்டியில் ஆட்டநாயகனாக துஸ்யந்தன் மற்றும் தொடராட்ட நாயகனாக மின்னொளி விளையாட்டுக்கழகத்தைச் சேர்ந்த செல்வகுமார் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.
இவ்விறுதிப் போட்டிக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அம்பாறை மாவட்ட ஜனாதிபதி இணைப்பாளர் இனிய பாரதி அவர்கள் வெற்றிக்கிண்ணங்களை வழங்கிவைத்தார்.
திருக்கோயில் நிருபர்
0 comments :
Post a Comment