குஷ்டரோக வைத்தியசாலைப் பிரசேத்தில் தீ. நோயாளிகளை விமானப்படையினர் வெளியேற்றினர்.
மட்டக்களப்பு மாந்தீவுப் பிரதேசத்தில் உள்ள காடுகளில் தீப் பற்றிக்கொண்டுள்ளது. இன்று காலை 05.30 மணியளவில் ஏற்பட்ட தீடீர் அனர்த்தத்தில் சிக்கியிருக்கக் கூடிய மக்களை இலங்கை விமானப்படையினர் உரியநேரத்தில் செயற்பட்டு காப்பாற்றியுள்ளனர்.
தீவுப் பகுதியான இப்பிரதேசத்தில் குஷ்டரோக வைத்தியசாலை ஒன்றுள்ளது. அங்கிருந்த 13 நோயளிகளையும் வைத்தியசாலை ஊழியர்களையும் விமானப்படையினர் ஹெலிக்கொப்டர்கள் மூலமும் படகுகள் மூலமும் வெளியேற்றியுள்ளதுடன், ஹெலியில் இருந்து நீரை ஊற்று வைத்தியசாலையை அண்டிய தீயையும் கட்டுப்படுத்தியுள்ளனர்.
காடுகளில் எவ்வாறு தீப்பிடித்தது என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. மட்டக்களப்பு அரச அதிபர் காரியாலய அதிகாரிகளும், பொலிஸாரும் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் பாதிக்கப்பட்டவர்களின் சேதங்கள் தொடர்பாகவும் கவனம் செலுத்தி வருவதாக தெரியவருகின்றது. எது எவ்வாறாயினும் உயிர்சேதங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன் பொருட்சேதங்களும் குறிப்பிடத்தக்களவு இல்லை எனப்படுகின்றது.
0 comments :
Post a Comment