இலங்கையில் இன்னும் பீதி குறையவில்லை: முன்னாள் அதிபர் சந்திரிகா.
விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும் இன்னும் இலங்கையில் பீதி குறையவில்லை. அடிப்படை உரிமைகளும், சுதந்திரமும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நான் இப்போதும் பாதுகாப்பு அங்கு இல்லாததாகத்தான் கருதுகிறேன் என கொச்சியில் ஊடகவியலாளர்களிடம் பேசும் போது கூறியுள்ளார்
கொச்சியில் நடைபெற்ற சர்வதேச ரோட்டரி சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக, அங்கு சென்றிருந்த இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க, ரோட்டரி சங்க விழாவை தொடங்கி வைத்த பின்னர் அங்கிருந்து, மாநில தலைநகர் திருவனந்தபுரம் சென்றடைந்தார். அங்கு தலைமைச் செயலகம் சென்று, முதல்- மந்திரி வி.எஸ். அச்சுதானந்தனை சந்தித்தார்.
பின்னர் நிருபர்களிடம் பேசும்போது மேற்காண்டவாறு கூறியுள்ள அவர் மேலும் கூறியதாவது:-
கேரளாவிற்கு பலமுறை வந்திருந்தாலும், மாநில முதல்-மந்திரியை சந்திப்பது இதுவே முதல்முறையாகும். இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான்.
இலங்கையில் தீவிரவாதத்திற்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டது.
அங்கு நடைபெற்ற தீவிரவாதத்திற்கு எதிரான போரில், கடந்த 2 ஆண்டுகளில் ஏராளமான பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்டு இருப்பது உண்மை தான்.
அங்கு மனித உரிமை மீறல் நடந்ததா? ஏனக்கேட்டபோது இது பற்றி நான் கருத்து சொல்ல முடியாது என தெரிவித்துள்ளார் .
0 comments :
Post a Comment