மேலுமோர் மோசடிப் பேர்வழி கைது.
Sriyavi Homes Lands & Investments எனும் நிறுவனம் ஊடாக 430 மில்லியன் ரூபாய்களை மக்களிடம் பெற்று ஏமாற்றியுள்ளதாக கூறப்படும் நபர் ஒருவரை பாணந்துறை விசேட குற்றத்தடுப்புப் பிரிவினர் பம்பலப்பிட்டி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.
மேற்படி நிறுவனத்திற்காக நாடுபூராகவும் முகவர்களை நியமித்து, குறைந்த விலையில் வீடுகளைக் கட்டித்தருவதாக பலரிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இதற்காக ஜா-எல பிரதேசத்தில் காணிகளும் வேலைத் திட்டங்களும் மக்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளது.
பணம் கொடுத்த நபர்கள் தமது வீடு காணிகளுக்காக பல மாதங்கள் காத்திருந்தும் முன்னேற்றம் எதுவும் காணாத நிலையில் பொலிஸில் முறைப்பாடு செய்ய ஆரம்பித்ததை தொடர்ந்து, 21 வயதான குறிப்பிட்ட நபர் சில காலங்கள் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இவரது நடமாட்டம் பம்பலப்பிட்டியில் காணப்படுவதாக அறிந்து பொலிஸார் நேற்று முன்தினம் 12ம் திகதி இவரை கைது செய்துள்ளனர்.
பாணந்துறை பொலிஸ் நிலையத்தில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்த மக்கள் பலர் அங்கு விரைந்து தமது முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதுடன், குறிப்பிட்ட நபரை அடையாளம் காட்டியுள்ளதாக தெரியவருகின்றது. இவரது தகப்பனாரும் இம்மோசடிகளில் தொடர்பு பட்டிருந்தமைக்காக கைது செய்யப்பட்டு சில மாதங்களாக விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவர் மேலதிக விசாரணைகளுக்காக மிரிகானை விசேட பொலிஸ் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
குறிப்பிட்ட நிறுவனத்தின் இணையத்தளம்.
0 comments :
Post a Comment