Saturday, September 12, 2009

பாடசாலைகளில் புலிகளின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் அகற்றப்படவேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் காணப்படக்கூடிய புலிகளின் நினைவுச் சின்னங்கள் யாவற்றையும் உடனடியாக நீக்கி விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கிழக்குமாகாண கல்வி அமைச்சின் செயலர் உபுல் வீரவர்த்தன, திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

வடகிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் காணப்படும் பாடசாலைகளில் இறந்த புலித் தளபதிகள், பொறுப்பாளர்கள், முக்கியஸ்தர்களின் உருவச்சிலைகள் மற்றும் ஞாபகச்சின்னங்கள் காணப்படுகின்றன. அத்துடன் சில பாடசாலைகளின் பெயர்கள் இறந்த புலித் தலைவர்களின் பெயர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அவ்வாறு பெயர் மாற்றம் பெற்றுள்ள பாடசாலைகளின் பெயர்கள் அவ்வப்பாடசாலைகளின் இயற்பெயருக்கு உடனடியாக மாற்றப்படவேண்டும் எனவும், அங்கு காணப்படக்கூடிய புலிகளின் சிலைகள் மற்றும் ஞாபகச்சின்னங்கள் உடனடியாக அகற்றப்படவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com