Saturday, September 5, 2009

மிதிவெடிகள் அகற்றும் இயந்திரங்கள் இறக்குமதி.

வன்னிமக்களை மீள்குடியேற்றும் செயற்திட்டங்களை துரிதப்படுத்தும் பொருட்டு மிதிவெடி மற்றும் கன்னிவெடிகளை அகற்றும் வேகத்தை அதிகரிப்பதற்காக செக்கோசிலோவாக்கியா நாட்டில் இருந்து கன்னிவெடி அகற்றும் இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

மக்கள் இல்லாமல் தனி சூனியப்பிரதேசங்களாக, மயானங்களாக காட்சிதரும் வன்னிப்பிரதேத்தில் விதைக்கப்பட்டுள்ள மிதிவெடி மற்றும் கன்னிவெடிகளை அகற்றுவதற்காக இலங்கை இராணுவத்தினருடன் மேலும் 8 அமைப்புக்கள் செயற்பட்டு வருவதாக தெரிவித்துள்ள கன்னிவெடி அகற்றும் செயற்பாட்டின் இணைப்பாளர் மேஜர் ஜெனரல் டி.எம்.டி அல்விஸ் இக்குழுவினரால் நாளொன்றுக்கு 10 சதுரமீற்றர் (100 சதுர அடி) நிலப்பரப்யையே சுத்தம் செய்ய முடிவதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட இயந்திரங்கள் ஊடாக நாளொன்றிற்கு 5000 சதுர அடி நிலப்பரப்பை சுத்தம் செய்ய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

MineWolf, எனப்படும் குறிப்பிட்ட இயந்திரத்தை கொள்வனவு செய்வதற்கு கனடா அரசு நிதி உதவி புரிவதாக தெரியவருகின்றது.

குறிப்பிட்ட இயந்திரம் தொடர்பான அறிவைப் பெற்றுக்கொள்ள விரும்புவோர் கீழ் காணப்படும் இணைப்பிற்குச் சென்று பார்வையிடலாம். ஒரு மிதிவெடி ஒன்றின் பெறுமதி 3 தொடக்கம் 30 அமெரிக்க டொலர்கள் எனவும் அவற்றில் ஒன்றை களற்றுவதற்கான செலவு 1000 அமெரிக்க டொலர்கள் எனவும் அங்கு குறிப்பிடப்பட்டுள்ளது.

http://www.minewolf.com/minewolf-demining-machine.html


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com