Wednesday, September 2, 2009

வீடியோ போலியானது என்பதை இலங்கை நிருபிக்கவேண்டும் என்கின்றது ஐ.நா.

லண்டன் சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்டுள்ளதும் சர்வதேச ரீதியில் மிகவும் பேசப்படுவதுமான வீடியோ பதிவு பொய்யானது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கை அரசின் இக்கூற்று தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள மரண தண்டனைகளுக்கான ஐ.நா வின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ரென், குறிப்பிட்ட வீடியோ பொய்யானதாக இருந்தால் இலங்கை அரசு அதனை நிருபிக்கவேண்டும் எனக் கோரியுள்ளார்.

அத்துடன் அவ்வாறு அதில் எவ்வித உண்மைகளும் இல்லையாயின், இலங்கை அரசு பொதுவான சர்வதேச விசாரணைக்குழு ஒன்றை இது தொடர்பாக விசாரணை செய்ய அனுமதிப்பதன் மூலம் அவர்கள் லாபமடையலேயே அன்றி எவ்வித இழப்புக்களையும் சந்திக்கமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment