Tuesday, September 1, 2009

ஜனாதிபதிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவு. 7ம் திகதி விசேட சந்திப்பாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு ஒன்று எதிர்வரும் 7ம் திகதி இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது. இச்சந்திப்பில் தேசியப் பிரச்சினைக்கான தீர்வு விடயமாக பேசப்படும் எனக் கூறப்படுகின்றது.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை வெளியேற்றி தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்படுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் ஜனாதிபதி மஹிந்த அரசிற்று ஆதரவு வழங்குவோம் என திருமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறாயினும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையில் உயிர்வாழும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இடைத்தங்கல் முகாம் மக்கள் மீழ்குடியயேற்றப் படவேண்டும் என நியாயமான திகதியை அறிவிக்காததுடன் தமிழ் மக்கள் சார்பாக தாம் எதிர்பார்க்கும் தீர்வுத்திட்டம் யாது எனவும் இதுவரை சம்பந்தப்பட்ட மக்களுக்கு தெரியப்படுத்தவில்லை. எதிர்வரும் 7ம் திகதி ஜனாதிபதியை சந்திக்க உள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவ்வாறான தீர்வினை அரசிடம் முன்வைக்கப்போகின்றார்கள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தவேண்டும் என பலரும் எதிர்பார்கின்றனர்.

புலிகள் பேச்சுவார்த்தைகளை தம்தை வளம்படுத்திக்கொள்ள பயன்படுத்தியது போல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் அரசுடன் ஏதோ ஒப்பந்தத்தை செய்து தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றப் புறப்படுவதாகவே சந்தேகிக்கப்படுகின்றது.


No comments:

Post a Comment