சனல் 4 விற்கு எதிராக சட்டநடவடிக்கை. விசாரணைப் பிரதிகள் பான் கீ மூன் க்கு அனுப்பிவைப்பு.
பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியினால் ஒலிபரப்பட்ட சர்சைக்குரிய வீடியோ காட்சி தொடர்பாக இலங்கை அரசாங்கம் விசாரணைகளை நாடாத்தியுள்ளது. குறிப்பிட்ட வீடியோவை தகவல் தொழில் நுட்பத்துறையில் மிகவும் தேர்ச்சி பெற்றவரும் உலகில் உள்ள பல பிரசித்திபெற்ற தொலைத் தொடர்பு மற்றும் தொலைக்காட்சி சேவைகளில் இயக்குனராவும் கடமையாற்றியிருக்கின்ற சிறி கேவாவித்தாரண அவர்கள் பரீட்சித்ததில், குறிப்பிட்ட வீடியோ முற்றிலும் பொய்யானது என தொழிநுட்ப ரீதியாக மிகவும் தெளிவாக விழக்கியிருக்கின்றார்.
அத்துடன் குறிப்பிட்ட வீடியோ தொடர்பாக கலாநிதி சத்துர ரஞ்சன் சில்வா, பிரிகேடியர் பிரசாட் சமரசிங்க, மேஜர் பண்டார ஆகியோர் வௌ;வேறு கோணங்களில் விசாரணைகளை மேற்கொண்டு அது பொய்யானது என தமது அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளனர்.
அறிக்கைகளின் பிரதிகள் ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சி சேவை என்பவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அதே நேரம் இலங்கையின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கில் பிரித்தானிய சனல் 4 ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் குறிபிட்ட வீடியோக்காட்சியை ஒளிபரப்பியுள்ளதாக இலங்கை அரசு குற்றஞ்சுமத்தி வருன்றது. மேலும் இவ்வாறு பொறுப்புணர்வு அற்ற முறையில் குறித்த ஒளிபரப்புக்கூட்டுத்தாபம் செயற்பட்டமைக்காக அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமா என சட்டமா அதிபர் திணைக்களம் ஆராய்து வருவதாகவும் தெரியவருகின்றது.
0 comments :
Post a Comment