ஒக்டோபர் மாதக் கடைசியில் இடைத்தங்கல் முகாம்களில் 100000 பேர் எஞ்சுவர். -ரஜீவ-
இடைத்தங்கல் முகாம்களில் மக்களை நிரந்தரமாக வைத்திருக்கும் நோக்கம் அரசிற்கு இல்லை என அனர்த்த நிவாரண மற்றும் மனித உரிமைகள் அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் திரு. ரஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார். இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை இலங்கை அரசு நிரந்தரமாக வைத்திருக்க முயற்சி செய்கின்றது என பிரித்தானிய ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி தொடர்பாக கருத்து தெரிவித்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
நாம் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை மிக விரைவில் அவர்களது சொந்த இருப்பிடங்களை நோக்கி நகர்த்துவதற்கே விரும்புகின்றோம். அதே நேரம் நாட்டின் தேசியப்பாதுகாப்புத் தொடர்பாகவும் மிகவும் சிந்திக்கவேண்டிய நிலை உள்ளது எனவும் இடைத்தங்கல் முகாம்களில் உள்ள 280000 மக்களில் பெரும்பாலனவர்கள் செப்படம்பர் மாத முடிவில் அவர்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவர், அத்துடன் ஒக்டோபர் மாத முடிவில் இடைத்தங்கல் முகாம்கள் சுமார் 100000 மக்களே எஞ்சுவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment