Sunday, August 16, 2009

SSDO-Canada நிறுவனத்தின் உதவியுடன் வன்னி மக்களுக்கான உதவிப்பொருட்கள் அனுப்பிவைப்பு!

வன்னியில் இடம்பெற்ற மோதல்களால் அங்கிருந்து இடம்பெயர்ந்து வவுனியா, செட்டிகுளம் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி முகாம்களில் வாழ்ந்துவரும் மக்களுக்காக சமூக சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்(SSDO)கனடா என்ற எமது அமைப்பு உடுப்புகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள், சக்கரநாற்காலிகள், ஊன்றுகோல்கள், வயோதிபர்களுக்கான வண்டில்கள் என பல்வேறு பொருட்களை அனுப்பி வைத்துள்ளதுடன், மேலும் பல பணிகளை முன்னெடுத்து வருகின்றது. எமது உறவுகளுக்காக சேகரிக்கப்பட்ட உடுப்புகள், சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்கள் என்பன அடங்கிய கொள்கலன் ஒன்றை கடந்த புதன்கிழமை 12.08.2009 அன்று வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் மக்கள் நலன்சார்ந்த பணிக்கு கனடாவில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், வைத்தியர்கள், வீடு விற்பனை முகவர்கள், பொதுமக்கள், கத்தோலிக்க திருச்சபைகள், சாய்பாபா மன்றத்தினர், ஊர் மக்கள் ஒன்றியங்கள், என பலதரப்பினரும் உதவி புரிந்துள்ளனர். இவர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள இவ் மக்கள் பணி உரியமுறையில் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் ஒழுங்குமுறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாம் மேற்படி பணியை எமது தொண்டர்கள் மத்தியில் ஆரம்பத்தில் முன்னெடுத்திருந்தபோதும், இறுதியில் வர்த்தக நிறுவனங்கள் உட்பட மேலே குறிப்பிட்ட அனைத்து தரப்பினரும் எம்முடன் பக்கதுணையாக இருந்து உதவிப்பொருட்கள் மக்களை சென்றடைவதற்கு உதவியுள்ளனர். அவர்களுக்கும் இவ் சந்தர்ப்பத்தில் நன்றியை தெரிவித்து கொள்கின்றோம்.

அடுத்த கட்டமாக மோதல்களின்போது அவையங்களை இழந்து அங்கவீனர்களாகியுள்ள மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்குடன் சக்கரநாற்காலிகள், ஊன்றுகோல்கள், வயோதிபர்களுக்கான தள்ளுவண்டிகள் என்பனவற்றை சீனாவில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரித்து அவற்றை அங்கிருந்தே அனுப்புவதற்கான நடவடிக்கையிலும் SSDO-Canada என்ற எமது அமைப்பு ஈடுபட்டுள்ளது.

மேற்படி பொருட்கள் அடங்கிய கொள்கலன் அடுத்துவரும் வாரங்களில சீனாவில் இருந்து வவுனியாவுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எமது இந்த பணிக்கு பெருமளவு நிதியுதவி தேவையாக இருந்த நிலையில் அதற்கு கனடாவில் உள்ள தனியார் வானொலியான CTBC என்ற வானொலி பொதுமக்களிடம் நிதி சேகரித்து உதவியுள்ளது. றோயல் புரோக்கர்ஸ் என்ற காப்புறுதி நிலையத்தின் முகவர் சிவா கந்தைய்யா தனது நிகழ்ச்சியின் நேரத்தை எமது உறவகளின் உதவிக்காக ஒதுக்கிதந்து உதவியுள்ளார். அவருக்கும் வானொலி நிலையத்தினருக்கும் மற்றும் எம்மால் கோரப்பட்ட நிதியை குறுகிய நேரத்தில் தந்து உதவிய கனடாவாழ் தமிழ்மக்களுக்கும் எமது நண்றிகளை தெரிவித்து கொள்வதுடன், எமது மக்களுக்காக எமது அமைப்பிடம் வழங்கிய நிதிகள், வேலைத்திட்டங்கள் தொடர்பான விபரங்களை பத்திரிகைகள், வானொலிகள், இணையத்தளங்கள் ஊடகாவும் அறியத்தருவோம் என்பதையும் தெரிவித்து கொள்கின்றோம்.

ஸ்ரீசமூக சுயதொழில் அபிவிருத்தி நிறுவனம்-கனடா

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com