மகன் பொலிஸ் வேடம் பூண்டதை மறைப்பதற்காக தற்கொலை வாகனப் பூச்சாண்டி காட்டினார் எஸ்எஸ்பி.
மாலம்பே தகவல் தொழில்நுட்ப கல்ல£ரி ஒன்றில் பயிலும் தனது மகன் பொலிஸ் அதிகாரத்தை கையில் எடுத்து சகமாணவன் ஒருவரை கட்த்திச் சென்று சித்திரவை செய்த விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து, பிரச்சினை முடி மறைக்கப்பட முடியாத நிலைக்கு வந்த போது நவீன வியூகம் ஒன்றை வகுத்கு தற்கொலைக் குண்டு பூச்சாண்டி ஒன்றை காட்டி தனது மகனது தவறை மறைத்து விடலாம் என கொழும்பு குற்றத் தடுதப்பு பிரிவின் இயக்குனர் வாஸ் குணவர்த்தன அவர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சியும் அம்பலமாகியுள்ளது.
வட மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கே மேற்படி தற்கொலை வாகன விடயம் முற்றிலும் தவறானது என தெரிவித்துள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணை ஒன்றை மேற்கொள்ளுமாறு ஆணையிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கடந்த இரு தினங்களுக்கு முன்னர் காலை 10 மணியளவில் மன்னார் பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் சந்தேக நபர் ஒருவரைக் கைது செய்வதற்கு உதவி கோரியுள்ளதுடன் அந்த பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த புலனாய்வு அதிகாரி ஒருவரின் ஒத்துழைப்பின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வாகனம் ஒன்று தொடர்பில் தகவல் தெரியவந்துள்ளது.
குறித்த வாகனம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்ட விசாரணைகளின் போது குறித்த வாகனம் வாடகைக்காக சிலரால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது என்று சந்தேக நபர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து பொலிஸாhர் அந்த வாகனத்தைப் பார்க்க வேண்டும் என்று கூறியதும் தொலைபெசி மூலம் தொடர்பு கொண்ட சந்தேக நபர் வாகனத்தை பொலிஸ் நிலையத்துக்கு கொண்டுவரச் செய்துள்ளார்.
அதன் பின்னர் குறித்த வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதியை வாகனத்திலிருந்து கீழே இறக்கியுள்ள பொலிஸார் அதனை சந்தேக நபருடன் கொழும்புக்கு எடுத்து வந்துள்ளனர். இது தொடர்பில் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் லெவ்கேயிடம் ஊடகம் ஓன்று கேட்ட போது தெரியவந்ததுள்ளது.
அதிசக்தி வாய்ந்த 20 குண்டுகள் பொறுத்தப்பட்ட வான் ஒன்று மன்னார், உப்புக்குளம் பிரதேசத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டது என்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்ட வரும் பிரசாரத்தில் உள்ள உண்மைத் தன்மை குறித்து முழுமையானதொரு விசாரணையினை நடத்தி அது தொடர்பான அறிக்கையினை தமக்கு கையளிக்குமாறு வடக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் நிமால் லெவ்கேவினால் மன்னார் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசில் பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க ஆகியோருக்கு உத்தரவு இட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த வாகனத்தில் குண்டுகள் எதுவும் பொருத்தப்பட்டிருந்தமை தொடர்பில் தனக்கு அறிவிக்கப்படவில்லை என்று பிரதி பொலிஸ் மா அதிபர் லெவ்கே தெரிவித்தார். அவ்வாறு குண்டுகள் பொறுத்தப்பட்டிருந்தால் முதலில் அந்தக் குண்டுகளை செயலிழக்கச் செய்திருக்க வேண்டும். அத்துடன் அந்த வாகனத்தில் குண்டுகள் காணப்பட்ட விடயம் தொடர்பில் பிரதேசத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் என்ற வகையின் எனக்கோ அல்லது பிரதி பொலிஸ் மா அதிபருக்கோ இல்லை சிரேஷ் பொலிஸ் அத்தியட்சருக்கோ தெரிவித்திருக்க வேண்டும்.
குண்டுகள் பொறுத்தப்பட்ட வாகனம் ஒன்று கைது செய்யப்பட்ட விடயம் தொடர்பில் தான் வானொலிச் செய்தியின் மூலமாகவே அறிந்து கொண்டதாக தெரிவித்த லெவ்கே இந்த சம்பவம் தொடர்பில் முழுமையானதொரு விசாரணையை நடத்தில் அது உண்மையா? போய்யா? ஏன்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மன்னார் பிரதேசத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சிசில் பெரேரா மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க ஆகியோருக்கு உத்தரவு இட்டுள்ளார்.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பில் தான் பொலிஸ் மா அதிபருக்கும் தகவல் வழங்கியதாக லெவ்கே மேலும் கூறினார்.
0 comments :
Post a Comment