ஜானகபெரேரா கொலைவழக்கின் பிரதான சந்தேக நபர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம்.
மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலின் பிரதான நபர் அனுராதபுரம் நீதிமன்றில் வாக்குமலம் ஒன்றை அளிக்கவிரும்புவதாக குற்றப்புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளனர். இடைத்தங்கல் முகாம் ஒன்றில் வைத்து கைதுசெய்யப்பட்ட ரெரன் என அழைக்கப்படும் சுப்ரமணியம் சுதாகரன் என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் தடுப்புக்காவலில் உள்ளபோது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட தாக்குதலின் பிரதான சந்தேச நபரான ரெரன் நீதிமன்றில் அளிக்க இருக்கும் வாக்குமூலம் குற்ற ஒப்புதல்வாக்கு மூலமாக கொள்ளப்படும். அத்துடன் இத்தாக்குதலுக்கு உதவிய முஸ்லிம் சந்தேக நபர்களிடம் இருந்து அவர்களுக்கு புலிகளியக்கத்தால் வழங்கப்பட்டிருந்த பரிசில் பொருட்களும் பெருந்தொகைப்பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சந்தேக நபர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கியுள்ள வாக்குமூலங்களை ஆராரமாக கொண்டு சட்டமா அதிபர் திணைக்களம் வழக்கு தாக்குதலுக்கான விடயங்களை துரிதப்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது.
0 comments :
Post a Comment