Tuesday, August 4, 2009

மேல் மாகாண முதல் அமைச்சர் பண மோசடி. பட்டயக்கணக்கறிக்கை வெளிப்படுத்துகின்றது.

மேல் மாகாண முதல் அமைச்சர் பிரசன்ண றணதுங்க பண மோசடி செய்துள்ளமை பட்டயக்கணக்காளர்களின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 2007ம் ஆண்டு மார்ச் மாதம் 31ம் திகதி மேற்கொள்ளப்பட்ட வருட முடிவு பட்டயக்கணக்காய்வு அறிக்கையில் இவ்விடயம் வெளிவந்துள்ளது.

அவ்வறிக்கையின் படி கையடக்க தொலைபேசி ஒன்றின் கட்டணமாக 51,245.00 பெறப்பட்டுள்ளதாகவும் அனால் அத்தொலைபேசி அதிகாரா பூர்வமற்ற தொலைபேசி எனவும் கண்டுபிடிக்கப்பட்டள்ளது.

அத்துடன் திரு. றணதுங்க அவர்கள் சுகாதார மற்றும் சுதேச மருந்து அமைச்சராக இருந்தபோது இங்கிலாந்தில் இடம்பெற்ற சர்வேதேச ஆயுர்வேத மருத்துவம் தொடர்பான கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்பயணத்தின் போது தனது உணவு மற்றும் தங்குமிடச் செலவினமாக 153,551.00 ருபாக்களை பெற்றுக்கொண்டிருந்தார். ஆனால் உணவு மற்றும் தங்குமிடம் இலவசம் என கருத்தரங்கு ஏற்பாட்டாளர்களால் அறிவிக்கப்பட்டிருந்தாகவும் பட்டயக்காணக்காளர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

No comments:

Post a Comment