கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டரிடம் விசாரணை.
விசேட பொலிஸ் அணி ஒன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் இயக்குனரான சிரேஸ்ட பொலிஸ் அத்தியஸ்டகர் வாஸ் குணவர்த்தனவிடம் மாணவர் ஒருவர் கடத்தப்பட்டமை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அவரது வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றின் மாணவன் நிபுண ராமநாயக்க பொலிஸ் குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரியின் வீட்டில் வைத்து கடுமையாக தாக்கப்பட்டார் என பாதிக்கப்பட்ட மாணவன் தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கல்லூரியில் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் மகன் பயின்று வருவாதாகவும் அங்கு அதிகாரியின் மகனுக்கும் பாதிக்கப்பட்ட மாணவனுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பொலிஸ் அதிகாரம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சுமத்தப்படுகின்றது.
பாதிக்கப்பட்ட மாணவன், தான் பொலிஸ் அதிகாரியின் வீட்டில் வைத்து தனது சக மாணவனான பொலிஸ் அதிகாரியின் மகனாலும் அவரது தாயாராலும் தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர், தன்மீது குறிப்பிட்ட பொலிஸ் அதிகாரி பாதாள உலக குழுஒன்றைச் சேர்ந்தவர் என முத்திரை குத்த முற்பட்டதாகவும் அதற்கான ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றை ஒத்த பத்திரிகை ஒன்றில் பலாத்காரமாக கையொப்பம் பெற முற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment