பாக்கிஸ்தான் இராணுவத்தினருக்கு இலங்கையில் பயிற்சி.
உள்நாட்டு யுத்தத்தில் கிளர்ச்சியாளர்களை கையாள்வது தொடர்பாக இராணுவப் பயிற்சிகளை இலங்கை இராணுவத்தினரிடம் பெற்றுக்கொள்ள பாக்கிஸ்தான் ஆர்வம்கொண்டுள்ளது. இது தொடர்பாக லண்டன் பிபிசி க்கு கருத்து தெரிவித்த இராணுவத்தளபதி ஜகத் ஜெயசூரியா, இஸ்லாமாபாத்தில் இருந்து தமக்கு கிடைத்துள்ள விண்ணப்பம் தொடர்பாக தாம் சாதகமானதோர் பதிலை கொடுக்க காத்திருப்பதாகவும், ஆனால் பயிற்சிகள் நிச்சயமாக புதிதாக விடுவிக்கப்பட்ட வன்னிப்பிரதேசத்தில் இடம்பெற மாட்டாது எனவும் தெரிவித்ததுள்ளார்.
சிறு சிறு குழுக்களாக 6 வாரங்களுக்கு இடம்பெறக்கூடிய இப்பயிற்சி நெறிகள் தென்கிழக்கு பிரதேசத்தில் இடம்பெறும் எனவும், பாக்கிஸ்தான் தவிர்ந்த அமெரிக்கா உட்பட்ட வேறு பல நாடுகளுக்கும் பயங்கரவாதத்தினை கையாளும் விடயம் தொடர்பான பயற்சிகளை தாம் வழங்கியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment