எனது வாழ்நாளில் கண்டிராத தேர்தல் பிரச்சாரத்தை வவுனியாவில் கண்டேன். சித்தார்த்தன்.
வவுனியா மற்றும் யாழ் ற்கான உள்ளுராட்சி சபை, நகரசபைத் தேர்தல்களுக்கான பிரச்சாரங்கள் இன்று நள்ளிரவுடன் முடிவுறும் நிலையில் தனது வாழ்நாளில் கண்டிராத தேர்தல் பிரச்சாரத்தை வவுனியா உள்ளுராட்சி சபைக்கான தேர்தலில் கண்டதாக கடந்த 3வாரங்களாக வவுனியாவில் தங்கியிருந்து தமது கட்சி உறுப்பினர்கள் சார்பாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் புளொட் அமைப்பின் தலைவர் திரு. சித்தார்த்தன் தெரிவித்தார்.
தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக அவர் விபரிக்கையில், சகல கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்களும் தமக்கான விருப்பு வாக்குகளை திரட்டுவதில் தீவிரமாக ஈடுபடுவதுடன், பிரச்சாரவேலைகளில் சகல கட்சிகளும் மிகவும் தீவிரம் காட்டின. அத்துடன் அரசுடன் இணைந்துள்ள கட்சிகளில் பிரதான கட்சி தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்து கொண்ட மக்களுக்கு தலா 200 - 500 ரூபாக்கள் கொடுத்த சம்பவங்களும் உண்டு என்றார்.
மேலும் வவுனியா பிரதேசத்தில் உள்ள சகல மக்களையும் ஓர் குறுகிய காலப்பகுதியினுள் அவரவர் வீடுகளுக்குச் சென்று சந்தித்து அவர்களுடன் பேசியதன் மூலம் தான் மிகவும் மகிழ்சி அடைந்துள்ளாக தெரிவித்த அவர், மோசடிகள் இடம்பெறாவிடின் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்பது நிச்சயம் எனவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment