ஏறாவூரில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை
ஏறாவூர்ப் பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஏறாவூர் மக்காமடி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான சாகுல் ஹமீது அப்துல் ஸமது என்பவரே இச் சம்பவத்தில் பலியானவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் இரவு 7.30 மணியளவில் வீட்டில் தொழுகையை முடித்துவிட்டிருந்தவேளையில் அங்கு வந்த இரு வாலிபர்கள் இவரை அழைத்து துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவருக்கு நெஞ்சு, தலை, பிடறி ஆகிய இடங்களில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் காணப்படுகின்றன. கைத்துப்பாக்கி இக்கொலைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
ஜனாஸா ஏறாவூர் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மரணமடைந்த நபர் அவரிடமிருந்த ஒரு தொகுதி ஆயுதங்களை அண்மையில் ஏறாவூர்ப் பொலிஸாரிடம் ஒப்படைத்ததாக பொலிஸ் பொறுப்பதிகாரி சுனில் பிரியந்த தெரிவித்தார்.
0 comments :
Post a Comment