தமிழ்ர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய ராச்சியக் கிளை விடுக்கும் வேண்டுகோள்
உங்கள் வாக்கு உரிமையை யாருக்கு அளிக்கலாம்
வரலாற்று ரீதியாக எமது மக்கள் வாழும் பிரதேசத்தில் சுயநிர்ணய உரிமையின்
அடிப்படையில் அவர்களுக்கு சகல அதிகாரங்களுடனான முழுமையான சுயாட்சி வழங்கப்பட
வேண்டும். இதுவே எமது மக்களுக்கான தீர்வாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தமை யாவரும் அறிந்ததே..
இப்படி எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் நம் நாட்டிலே. இலங்கைத் தமிழர்க்கு எப்படிப்பட்ட உரிமை ஏற்கக்கூடியது என்று தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு.வீரசிங்கம் ஆனந்தசங்கரி அவர்கள் கூறிய போதெல்லாம், இந்தத் தேசியக் கூத்தமைப்பு ஏற்க மறுத்தார்கள். ..தலைவர் திரு.வீ. ஆனந்தசங்கரி அன்று தொட்டு இன்று வரை தமிழ் மக்களின் நன்மைக்காக, அயராது பாடுபடுகிறார் என்றால் மிகையாகுமா?
தமிழ் மக்களின் தேவையை இனம் கண்டு அவர் உலகளாவிய ரீதியில் தனது சொந்த
முயற்சியால் வெளிநாடுகள் சென்று வெளிநாட்டு அரசியல் தலைவர்களுடன் தமிழ் மக்களின்
எதிர் காலம் பற்றிக் கலந்து ஆராய்ந்து வந்த பின்பு இலங்கை அரசுடன், எதிர் கட்சித்
தலைமையுடன், ஜே.வீ.பீ. உடன், தலைமைப் பெளத்த பீடாதிபதிகளுடன், எப்படியான
சுயநிர்ணய உரிமையை கொடுக்கப் பட்டால், தமிழ் மக்கள் மன மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ள
முடியுமெனப் பலமுறை பேசி ஒரு இணக்கமும் கண்டு கொண்டுள்ள நேரங்களில் அது ஏற்க
முடியாததென்று அவரை அந்நேரம் புலிகளுக்காக நிந்தித்து விட்டுத் தற்போது தமிழருக்கு
அதையேதான் வேண்டுமென்று கூறுவது வேடிக்கையாகத் தோன்ற வில்லையா?
இதனை இப்போது சொல்லாமல் 2004ம் ஆண்டில் இருந்தே சொல்லியிருந்தால் அன்றிலிருந்து இன்றுவரை இழந்த பல்லாயிரக் கணக்கான இன்னுயிர்களும் காப்பாற்றப் பட்டு இருந்திருக்குமே இத்தனை ஆயிரம் உயிர்கள் அழிய உடந்தையாக இருந்தவர்கள் தற்போது சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுவதும் அதைத் தாங்கள்தான் ஏதோ கண்டு பிடித்த மாதிரியும், தமிழ் மக்களை இன்னும்இவர்கள் ஏமாற்ற முயலுகிறார்கள்.
நடந்த போரினால் கொல்லப்பட்ட பொதுமக்களைக் காப்பாற்றக் கூடிய நல்ல சந்தர்பங்கள் இருந்தும் ஏன் திரு அமிர்தலிங்கம் 1987ல் இந்தியாவைக் கேட்டு அன்றைய போரில் பொதுமக்கள் இழப்புக்களைத் தடுக்கவில்லையா? அப்படிப்பட்ட ஞானம் இல்லையென்றால் தலைமைதான் எதற்கு. நம் நாட்டின் தலைவனான ஜனாதிபதியைச் சந்தித்து மந்திராலோசனை நடாத்தினார்களா? இல்லவே இல்லையே, ஏன் ஜனாதிபதி அழைத்தும் கூட அவர்களால் போக முடியவில்லை ஆனால், உலகை மட்டும் சுற்றி வந்தார்கள், சட்டம் தெரிந் தும் அதைப் பற்றி அக்கறை கொள்ளாத மக்களால் தெரிவு செய்யப்பட்ட கூட்டணியினர்.
ஜனதிபதியை சந்தித்து உரையாடியிருந்தால் மாற்றம் ஏதாவது ஏற்பட்டிருக்கலாம், ,அந்தமுயற்சியை எடுக்காதது ஏன்? எங்கே கேட்டால் என்ன நடக்கும் என்பதையறியாத கூத்தமைப்பை நமது மக்கள் தெரிவு செய்தது முறையோ அல்லது அவர்களை மக்களவைக்கு அனுப்பிவையுங்களென்று கட்டயப் படுத்திய புலிகள் செய்தது சரியோ?
அடி மேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்ற பொன்மொழியை விழங்கிக்கொள்ளா வீணர்க்கு வாக்களிப்பது என்று எம் மக்கள் எண்ணார்கள். இன்னும் ஒரு சந்தர்ப்பம் தமிழ் மக்களே உங்கட்கு வாய்த்துள்ளது யாரும் உங்களை வற்புறுத்தாச் சந்தர்ப்பம் இதில் உங்களுக்காக மட்டும் வாக்களியுங்கள்.
கூத்தணியினர் உல்லாசமாய் உலகம் சுற்ற, நமது தலைவரோ அருகிலிருந்த ஜனாதிபதியுடன்
தன்னால் முடிந்தவரை தொடர்பு கொண்டது மட்டுமல்லாமல், இலங்கையிலிருந்து கொண்டே வெளிஉலகுடன் தொடர்பைப் பேணி தன்னால் முடிந்தவற்றையெல்லாம் செய்து அகிம்சைதான் தனிவழி, விட்டுக்கொடுப்பு இன்னும் பெருவழி, என்று கூறி அதனால் பயனும் கண்ட தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் திரு. ஆனந்தசங்கரி, உயிர்பயமறியாத் தமிழ்ப் பற்றாளன், தனது கூட்டணியினரின் கொள்கைகளை தமிழ் மக்களனைவரும் அறியச் சொல்லியுள்ளார்.
இவர்கள்உண்மையைப் பேசும் போது சிலர் விளக்கமின்மையால் எதிர்கவும் செய்தனர், அதற்கும் அவகட்கு விளக்கம் கொடுத்தவர், அரை நூற்றாண்டுக்குமேல் அரசியல் அனுபவம் கண்டதமிழர், புத்தி ஜீவிகள் எல்லோருடனும் பேசியவர் பிழையை பிழை என்று வாதாடி அனைவரின் அன்பைப் பெற்ற உங்களின் உண்மை நண்பன், என்.எம்.பெரராவின் நம்பிக்கைச் சந்ததி, பொன்னம்பலவனின் மனநிறை சீடன், தந்தை செல்வாவின் வழியில் சென்றவர், அமிர்தம் அவரது நண்பன், கலைஞர் கருணாநிதியின் தோழன், இன்னும் கூற வேண்டுமானால் அனுபவ முதிர்சியின் உண்மைச் சிற்பி, பிரபு நெல்சன் கூறியது போல் பின்வாங்குதல் அறியாதவர் காரணம் தேவையற்ற விடயங்களில் மூக்கு நுளைக்காதவர், ஜனநாயகம் மட்டும் தான் அவர் கண் அதுதான் அவர் வழி, பண்பு, அவரும் தேர்தல் களத்தில். நல்லதைச் செய்யக் களம் இறங்கியுள்ளார் தமிழர்கோர் சந்தர்பம். பதவிகள் அவரைத் தேடி வந்த போதெல்லாம் பதவி ஆசை கொள்ளா மனிதரென்பதைச் சரித்திரரீதியாக இதுவரை நிரூபித்த தியாகி, அப்படிமட்டும் நினைத்திருந்தால் அவரும் கோடீஸ்வரனாக உலகை வலம் வந்திருப்பார், இதன் உண்மையை அறியாதோர், நம்பமுடியாதோர் இருக்கலாம் ஆனால் இங்கே கூறுவது முற்றிலும் உண்மை, அந்தத் தியாக குணத்திற்கு, நீங்கள் தலை வணங்குவீர்களென்பது எமது நம்பிக்கை. சூரியா கிரணத்தைப் பற்றிக் கேழ்விப் பட்டிருப்பீர்கக்ள், அதேபோல்தான் அவரின் அவரி அரசியல் வாழ்வைக் கிரகணம் போல் மறைத்து வைத்திருந்தார்கள், காரணம் அவர் கூறிய
பொன்மொழி’ ”தம்பி எனக்கு தமிழீழம் விருப்பமில்லையோ, விருப்பம்தான், ஆனால் அது கிடைக்கக் கூடிய வழிகளெல்லாம் முட்டாள்தனத்தால் அடைத்துவிட்டார்கள் ஆகவே அது கிடைக்காத பொருள், ஏன் வீணே தமிழ் மக்களின் வாழ்வைக் குழப்பவேண்டும்,அவர்களின் நிம்மதியை ஏன் சூறையாட வேண்டும், பெறக்கூடிய நல்ல சுயஉரிமையைப் எடுத்துக்கொண்டு, ஈழத்தைப்பற்றி விரிவாகச் சிந்திப்போம், உயிரின் விலை மதிப் பற்றது அதைத் தெரியாமல், உயிரை வீணடிக்கிறார்களே, கொஞ்சம் பொறும் எல்லாம் சரியாகிவிடும்,’’ என்று ஞான உரை தந்தார்..
இங்கே அரசசார்பிலும் போட்டியிடுகிறார்கள் மறைவாய் அதைக் காட்டி வன்முறையைக்
கையாளத் தெண்டிக்கலாம், அரசு நேர்மையானது அவர்கள் ஜனனாயகப் பாதையில்தான் செல்வார்கள். நீங்கள் உங்கள் வழியில் செல்லுங்கள் யாரும் உங்களை எதுவும் செய்யமாட்டார்கள்.
எனது அன்பின் தமிழ் மக்களே பலர் போட்டியிடுகிறார்கள், போட்டியிடுவது ஜனநாயகப்
பண்பு, வாக்களிப்பது மக்களின் உரிமை, அதேபோல் வள்ளுவனின் வறிய வரிகளுக் அமைய
எத்தன்மையாயினும் அப் பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு, உங்களுக்குச்
சந்தர்ப்பம் இம்மாதம் 8ம் திகதி பல ஆண்டுகளின் பின் முதல் முறையாக உங்கள் கையில்
உள்ளது உங்கள் ஜனநாயகத்தைப் பயமின்றிக் கட்டுங்கள். மக்கள் தீர்ப்பையே நாம்
மதிக்கிறோம், மிகுதி உன்களிடம் விட்டுள்ளேன்.
நன்றி,
வாழ்க ஜனநாயகம்
தமிழ்ர் விடுதலைக் கூட்டணி ஐக்கிய ராச்சியக் கிளை.
0 comments :
Post a Comment