Wednesday, August 12, 2009

கூட்டமைப்பின் அராஜகம் ஒழிந்தபாடில்லை.

வவுனியா உள்ளுராட்சி சபைத் தலைவராக நாதன் தெரிவு செய்யப்படுகின்றார்.

வவுனியா உள்ளுராட்சி சபைத் தேர்தலில் 5 ஆசனங்களைப் பெற்று வெற்றியீட்டிய தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அச்சபையின் தலைவராக 1099 விருப்பு வாக்குகளைப் பெற்ற எஸ்.என்.ஜி நாதன் என்பவரை தெரிவு செய்யவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தேர்தலில் முதன்மை வேட்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நாதன் விருப்புவாக்குகளின் அடிப்படையில் மூன்றாம் இடத்தைபெற்றுள்ளபோதும் சபைத்தலைவராக நியமிக்கப்படவுள்ளதுடன் கட்சியினுள் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற என்.எஸ். முகுந்தரன் என்பவர் சபையின் பிரதித் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

ஜனநாயக முறையில் இடம்பெற்ற தேர்தல் ஒன்றில் மக்களின் விருப்பு வெறுப்புக்களை நிராகரித்து புலிகளின் சர்வாதிகாரப் போக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்து கடைப்பிடித்து தமக்கு வேண்டியவர்களை நியமிப்பதானது, மக்களின் அபிலாசைகளுக்கு செவிசாய்க்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தயாராக இல்லை என்பதை தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளது.

அதே நேரம் குறிப்பிட்ட தேர்தலில் 3 ஆசனங்களைப் பெற்ற புளொட் அமைப்பின் முதன்மை வேட்பாளர் ரி.லிங்கநாதன் 2958 விருப்பு வாக்குகளைப் பெற்றருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com