கேபி யை துலாவுவதற்கு சிபிஐ அதிகாரிகள் இலங்கை விரைகின்றனர்.
இலங்கை அதிகாரிகளினால் விசாரணைக்கு உட்பட்டுவருகின்ற புலிகளின் புதிய தலைவராக தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ள கே.பி எனப்படும் குமரன் பத்தமநாதனை விசாரணை செய்வதற்கென இந்திய சிபிஐ அதிகாரிகள் அடுத்தவாரம் அளவில் இலங்கை வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ராஜிவ் கொலை தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுவரும் சிபிஐ இன் எம்டிஎம்ஏ (multi- disciplinary monitoring agency) அதிகாரிகள், கேபி ராஜிவ் கொலையுடன் தொடர்புடைய தனு, சிவராசன் ஆகியோருக்கு தேவையான பணம், ஆயுதங்கள், வெடிபொருட்கள், தற்கொலை அங்கி, தொலைத்தொடர்பு சாதனங்கள் உட்பட கொலைக்கு தேவையான சகல உதவிகளையும் செய்துள்ளதாக குற்றஞ்சுமத்தியுள்ளனர்.
ராஜிவ் கொலையுடன் கே.பி சம்பந்தப்பட்டிருக்கின்றார் என்ற விடயம் துலங்கியதில் இருந்து கே.பி க்கு வலைவிரித்திருந்த எம்டிஎம்ஏ அதிகாரிகள் அவரை கைது செய்ய 27 நாடுகளிடம் எழுத்து முலம் உதவி கோரியிருந்தனர். இறுதியாக ஜேர்மன் நாட்டில் உள்ள கே.பி யின் வங்கிக்கணக்குகள் தொடர்பான விபரங்களை பெற்றுக்கொள்ளும் பொருட்டு எம்டிஎம்ஏ அதிகாரிகள் குழு ஒன்று ஜேர்மன் நாட்டிற்கு சென்றிருந்ததுடன் அவற்றில் அவர்கள் எதிர்பார்த்த அளவு வெற்றியை பெற்றிருக்கவில்லை என கூறப்படுகின்றது. இந்நிலையில் தமக்கு தேவையான தகவல்களை கேபி யிடம் இருந்து பெற்றுக்கொள்ள இலங்கை அதிகாரிகள் ஒத்துழைப்பர் என எம்டிஎம்ஏ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment