Friday, August 21, 2009

அக்கரைப்பற்றில் கட்டிடம் ஒன்று தீக்கிரை. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் கைவரிசையாம்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் உள்ள கட்டிடடத்தின் தொகுதி தீயிட்டு கொழுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அக்கரைப்பற்று பிரதேசத்தில் தமது காரியாலயம் ஒன்றை திறப்பதற்கு குறிப்பிட்ட கட்டிடத்தை தெரிவுசெய்திருந்தாகவும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கு வருவதை எதிர்க்கும் பொதுமக்கள் அக்கட்டிடத்தை தீயிட்டு கொழுத்தியதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அதேநேரம், தமது வரவிற்கு பிரதேச மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்புவதை உணர்ந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தாம் திறக்கவுள்ள காரியாலயத்திற்கு பொலிஸ்பாதுகாப்பு கேட்டிருந்தாகவும், மக்களின் எதிர்ப்புக்கு பொலிஸ்பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு பரிசீலனை செய்து வந்தபோது தமக்கு சாதகமான பதில் கிடைக்காது என அச்சம் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமை, தமக்குள்ள அச்சுறுத்தலை ஊர்ஜிதப்படுத்தி பொலிஸ் பாதுகாப்பை பெற்றுக்கொள்வதற்காக குறிப்பிட்ட கட்டிடத்தொகுதிக்கு நெருப்பு வைத்துள்ளதாக பிறிதொரு தரப்பினர் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment